பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(212)

||– –

அப்பாத்துரையம் – 8

வந்தால்கூடக் கொடுத்திருப்பான். அதன் மதிப்பை அவன் அவ்வளவு நன்கு அறிந்திருந்தான். ஆனால், களத்தில் இன்று புரூக் அவன் செயல் காண நேர்ந்தும், அத்தகைய பாராட்டை அவன் பெறவில்லை! எனினும், தனக்கு அத்தகைய பாராட்டு வரும் காலம் தொலைவில்லை என்பதை அவன் அறிந்தான். களத்தில் அவனை அவர் உசாவிய போது ‘நீ நல்ல ஆட்டக்காரனாவாய்' என்று ஆர்வந் தெரிவித்ததிலிருந்து அவன் இதை மதித்தறிய முடிந்தது.

பள்ளி மாமனையின் புறவாயில்களை அடைக்க இன்னும் நெடுநேரமிருந்து. வாயிலடைந்த பின்பே பள்ளியில் தேநீர் வழங்கப்படும். ஆகவே, ஆடிக்களைப்புற்ற இருவரும் மற்றப் பல பிள்ளைகளைப்போல வெளியே சென்று சிற்றுண்டி அருந்த எண்ணினர். ஈஸ்ட் ஸாலியின் கடையைத்தான் நினைத்தான். “ஸாலி, இச்சமயம் மிகச் சிறந்த உருளைக் கிழங்குப் பொடிமாசு செய்துவைத்திருப்பாள்" என்று அவன் டாமிடம் கூறினான்.

டாமின் பையில் போதிய பணம் இருந்தது. “ஏன், இந்த மகிழ்ச்சிகரமான வேளையில் உயர் உணவுக் கடைகளில் சென்றாலென்ன!” என்ற எண்ணம் உள்ளூர அவனை அலைத்தது. ஆனால், தான் செலவு செய்வதாகச் சொன்னால், நண்பனுக்கு வருத்தமாக இருக்குமோ என்று தயங்கினான். எனினும், ஒருவாறு நயமாக 'அன்பனே! உருளைக் கிழங்கு சாப்பிட எனக்கும் ஆவல்தான் ஆனால், அத்துடன் வேறும் ஏதாவது சாப்பிட்டால் என்ன? என்னிடம்தான் நியைப் பணம் இருக்கிறதே!” என்றான்.

டாமின் வள்ளன்மையும் அதனுடன் கலந்த பெருந்தன்மையும் ஈஸ்டின் உள்ளத்தில் எழுச்சியூட்டின. “ஆ! நான் மறந்தே போனேன் டாம்! நீ இப்போது தான் வந்த புதுமாணவன் என்பதை! ஒரு நாளைக்குள் நீ அவ்வளவு எனக்குப் பழைய தோழனாகிவிட்டாய்! சென்ற சில வாரங்களில் என் பணமுழுவதும் செலவாயிற்று. அத்துடன் எங்கள் பகுதியில் ஒரு பலகணி உடைந்து போனதைச் சரிப்படுத்துவதற்காக, எங்கள் இவ்வாரப்படி நிறுத்தப்பட்டுவிட்டது. அதனால்தான் நான் உணவில்கூடக் கஞ்சனாக வேண்டியதாயிற்று!" என்று அவன் தன் நிலையை விளக்கினான்.