பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாம் பிரௌணின் பள்ளி வாழ்க்கை

66

213

‘அதற்கென்ன! எனக்குப் பசி மிகுதி. என்ன வாங்கலாம்? நீயே பார்த்து வாங்கு. நான் பணம் கொடுக்கிறேன்" என்றான் டாம்.

"நீ ஒப்பற்ற தோழன், டாம்! உன் அகன்ற நெஞ்சு யாருக்கு வரும்? உன்னைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். சமயம் வாய்க்கும்போது உன் நட்புக்கு நான் தகுதியுடையவன்தான் என்பதை நீ காண்பாய்! இப்போது நாம் பொரித்த கறியாக ஒரு கல் எடை வாங்கிகொள்ளலாம் என்று எண்ணுகிறேன். தேநீர்ச் சமயத்தில் அதனுடன் அருந்துவதற்கு அதுவே சிறந்த உணவு. அதை வாங்கி வைத்துக்கொண்டால், தற்போதைக்குப் பிள்ளைகளுடன் பிள்ளைகளாக உருளைக்கிழங்கு சாப்பிட்டு விட்டுப்பின் வயிறார உண்ணலாம்."

இருவரும் தெருக்களைக் கடந்து, முன்பாதி கலைப் பண்பு வாய்ந்த கடையாகவும், பின்பாதி வீடாகவும் அமைந்திருந்த ஒரு கட்டிடத்துக்குச் சென்றனர். நல்ல பொரித்த கறியாகத் தேர்ந்து ஒரு கல் எடை வாங்கினார்கள். அதனைச் சிப்பமாகக் கட்டும் நேரத்தில் டாம் அதற்குரிய பணத்தை எண்ணிக் கொடுத்தான். கடைத்தலைவி திருமதி போர்ட்டருடன் அதே சமயம் ஈஸ்ட் அளவளாவிப் பேசிக்கொண்டிருந்தான். பள்ளி இல்லத்தின் அருஞ்செயல் வெற்றியின் புகழ் அதற்குள் திருமதி போர்ட்டர் வரை எட்டியிருந்தது.

கையில் கறிச் சிப்பத்துடன் இருவரும் ஸாலியின் கடைக்குச் சென்றனர். பள்ளிமனையிலிருந்தும் பள்ளி இல்லத்திலிருந்தும் நிரம்பப் பிள்ளைகள் வந்து சுடச்சுட உருளைக்கிழங்கு பெறுவதற்காக வரிசை வரிசையாகக் காத்திருந்தனர்.

ஸாலி பிள்ளைகளனைவரையும் நன்கு அறிந்தவள். ஒவ்வொருவருடனும் மற்றச் சமயங்களில் அவர்களின் நாள் முறை வாழ்க்கையைப் பற்றி அமைதியாக அளவளாவுபவள். ஆனால், அன்று அவள் ஒரு சொல், இரண்டு சொல்லுக்கு மேல் யாருடனும் பேசவில்லை. அவ்வளவு விரைவாக அவள் முன்கட்டுக்கும் பின் கட்டுக்குமாக நடந்து உருளைக் கிழங்கைச் சுடச்சுட எடுத்து வந்து பரிமாறிக் கொண்டிருந்தாள்.

அவரவர் பையின் தகுதிக்கேற்றபடி ஒரு துட்டு, இரண்டு துட்டு, மூன்று துட்டு என ஒவ்வொரு பையனும் உருளைக் கிழங்குடன் அதன் ஆவியையும் சேர்த்து வாங்கி உண்டான். சிலர்