பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாம் பிரௌணின் பள்ளி வாழ்க்கை

217

வந்தமர்ந்தனர். சிறு பிள்ளைகள் அவர்கள்பின் அமர்ந்தனர். எல்லாருக்கும் பாட்டுக்கள் பாராமலே தெரிந்தாலும், புத்தகம் வைத்துப் படிப்பது மரபு மதிப்பாயிருந்தது. தவிர, பள்ளியின் தொடக்க காலத்திலிருந்து பாடப்பட்டு வரும் எல்லாப் பாடல்களும் ஒரே கையெழுத்தேட்டில் எழுதப்பட்டு மிகுந்த மதிப்புடன் மேசைத் தலைப்பில் வைக்கப்பட்டது.

தொகுதியாக அனைவரும் பாடுவதற்கு ஆறாம் படிவ மாணவரே தலைமை வகிப்பார். அவர்கள் வரும்வரை வழக்க மரபுப்படியே ஒவ்வொரு புதிய பையனும் தனித்தனி மேடை மீது ஏற்றப்பட்டான். ஒவ்வொருவனும் ஒரு வாய்ப்பாட்டுப் பாடவேண்டும் என்று கண்டிப்புச் செய்யப்பட்டிருந்தது.பாடத் தெரியாவிட்டாலும் மறுத்துவிட்டாலும், பாடல் இடையே முறிவுற்றாலும் அவன் தண்டனையாக ஒருசாடி உப்பு நீர் குடிக்க வேண்டும். டாம் சென்றிருந்த நாளில் எவருமே பாட மறுக்கவில்லை. ஒவ்வொருவரும் ஒரு குயிலாவே பாடித் தம் கடமையை நிறைவேற்றினர். டாமும் தனக்குத் தெரிந்த 'தோல்மிடா' என்ற நாட்டுப் பாடலைப் பாடினான். அது எல்லாராலும் கைகொட்டி ஆரவாரத்துடன் வரவேற்கப்பட்டது.

அரைமணி நேரம் இங்ஙனம் தனிப்பாடலில் செல்வதற்குள் ஆறாம் படிவ, ஐந்தாம் படிவ மாணவர் வந்துவிட்டனர். அவர்கள் வந்தவுடன் தலைமையிருக்கைகளைப் பற்றி அமர்ந்தனர். முன் அமர்ந்தவர்கள் தம் வரிசையில் எழுந்து உட்காரவே,

டமில்லாத கீழ் வகுப்பு, புதிய மாணவர்கள் மற்றவர்களைச் கற்றிப் பின்னால் நின்றனர். கோப்பைகள் அதன்பின் நிரப்பப்பட்டு அனைவரும் வரிசை முறையில் வாங்கிப்பருகினர்.

மாணவர் குழுவின் குழலிசையாளன் வழக்கப்படி முதல் பாடற் பண்ணாகிய,

முட்ட நனைந்து, குமுறும் கடலில் முழங்கித் தொடரும் புயல் பின்னாக....

என்ற பாட்டுப் பாடினான். பின் 'பிரிட்டிஷ் துப்பாக்கி வீரர்கள்', ‘பில்லி டெய்லர்’, ‘சீரங்கப்பட்டணம் முற்றுகை', ‘மூன்று அஞ்சல்காரச் சிறுவர்' முதலிய பாட்டுக்களும் பாடப் பட்டன. இசையைவிட ஆர்வமே மிகுந்த நிலையில் எழுபது