1. நூன்முகம்
திருவள்ளுவர், கௌதம புத்தர் ஆகியோர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த உலகப் புகழ்பெற்ற பண்டை உலகப் பெரியார்கள். கீழ்த்திசையுலகில் அவர்கள் பண்டைப் புகழுடன் போட்டியிடவல்ல இக்காலப் பெரியார் காந்தியடிகள். அவரைப் போலவே மேல் நாடுகளில் பண்டை உலகப் பெரியார்களுடன் போட்டியிடத் தக்க இக்கால அறிவுலக மேதை பெர்னார்டுஷா. பொதுவாக, பெரியார்களுள் பலர் தம் காலத்துக்குப் பின்னரே புகழாட்சி பெறுவர். ஆனால், அறிஞர் பெர்னார்டுஷா, காந்தியடி களைப்போல, தம் வாழ்நாள் காலத்திற்குள்ளேயே உலகறிந்த புகழ்வேந்தர் ஆகியுள்ளார்.
பெர்னார்டுஷா ஒரு தலைசிறந்த ஆங்கில நாடக ஆசிரியர். இங்கிலாந்தின் பழங்கால நாடக ஆசிரியரான ஷேக்ஸ்பியர் இன்று உலக மேடையெங்கும் புகழ் நாட்டியுள்ளார். பெர்னார்டுஷா தம் காலத்துக்குள்ளேயே, உலக மேடையில் தனியாட்சி செலுத் தினார். இஃது ஒன்றே அவருக்குப் பெரும்புகழ்தரப் போதியது. ஆனால் அவர் பெருமை இத்துடன் அமையவில்லை. அவர் செய்தியிதழ் எழுத்தாளர், கலை ஆய்வுரையாளர், வசைத்துறை யாளர், கட்டுரையாளர், புனைகதையாளர் ஆகிய மற்றப் பல எழுத்தாண்மைத் துறைகளிலும் பெருமதிப்புப் பெற்றவர். அவர் இயற்றிய நாடகங்கள், புனைகதைகள், கட்டுரைகள் அள விறந்தன. அவை பொது மக்களாலும், அறிஞராலும் பெரிதும் பாராட்டப் பெறுபவை.
ஷா ஒரு எழுத்தாளர் மட்டுமன்று; அவர் ஒரு சிறந்த அறிஞர்; ஒரு சிறந்த சீர்திருத்தவாளர். சீர் திருத்தவாளிகளி டையேகூட அவர் ஓர் அறிவுப் புரட்சியாளராக மதிப்பிடத் தக்கவர். இதற்கேற்ப, அவர் வாழ்க்கை ஒரு நீண்ட போராட்ட மாகவே இருந்தது. அவர் வறுமையினிடையே பிறந்தார். தம்