பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாம் பிரௌணின் பள்ளி வாழ்க்கை

219

மேடைப் பேச்சின் செயற்கை நடிப்பு, செயற்கை நடை எதுவும் புரூக்கின் உரையில் இல்லை. அவர் நேரடியாக நண்பர் நண்பருடன் பேசுவதுபோலவே பேசினார்.

"பள்ளி இல்லத்தின் வீரத் தோழர்களே! எனக்கு நீங்கள் பெருமையளித்து அன்புகாட்டினீர்கள்! உங்கள் புகழுக்கும் பாராட்டுக்கும் ஆளானது பற்றிப் பெருமைப்படுகிறேன். அதன் தகுதிக்கேற்றபடி உங்களிடம் பேசவேண்டும் என்ற அவா எனக்கு உண்டு. ஆயினும், என்னால் இயன்ற அளவுதான் அதை நான் நிறைவேற்ற முடியும். நான் என் வாழ்க்கையின் ஓர் இனிய பகுதியை இங்கே கழித்திருக்கிறேன். எட்டு ஆண்டுகள் அதன் நற்பண்புகளை நுர்ந்துவிட்டேன். இத்தகைய நிலையிலுள்ள ஒருவன் அதே நிலையை விரைவில் அடைய இருக்கும் தன் தோழர்களுக்கு என்ன சொல்ல வேண்டுமோ, அதைச் சொல்லவே நான் ஆசைப்படுகிறேன். இது விளையாட்டுப் து பேச்சன்று; அழகுப் பேச்சன்று, மனமார்ந்த பேச்சு, ஆகவே, காது கொடுத்து இதைக் கேட்பீர்களென்று வேண்டிக்கொள்கிறேன்.

66

996

>>

'ஆகா! கேட்போம்; கேட்போம்.” 'பேசுக' என்று குரல்கள் எழுந்து சில நேரம் உலாவின.

“என்னை நீங்கள் பெருமைப்படுத்துகிறீர்கள். பேட்டர் (தந்தை) என்று அழைக்கிறீர்கள். நான் சொல்வதற்குச் செவி கொடுக்காவிட்டால், சொல்லியபடி நடக்க முயலாவிட்டால் அங்ஙனம் அழைத்து என்ன பயன்?”

"நம் வாழ்வு எவ்வளவோ மகிழ்ச்சிகரமானது. இவ் அரையாண்டு முடிவுக்காலத்தில் அது இன்னும் மிகுதியாகி யுள்ளது. ஏனென்றால், நாம் பள்ளிமனை ஆட்டப்போட்டியில் வெற்றியும் புகழும் கண்டிக்கிறோம். நாள் முழுவதும் அதற்காகக் கடும் போராட்டமாடி மாலையில் மகிழ்ச்சியுடன் அயர்வுதீர ஆடிப்பாடிக் கூடியிருக்கிறோம். இவ்வெற்றியில் நம் மகிழ்ச்சி இரட்டிப்பானது. ஏனென்றால், பள்ளி மனையும் இத்தடவை எளிதாக நமக்கு வெற்றியை விட்டுவிடவில்லை. இறுதிவரை அவர்கள் முன் எப்போதுமில்லாத ஆர்வத்துடனும் கடைப் பிடியுடனும் பாடுபட்டார்கள்.அவர்களுக்கும் இந்த அரும்பெறல் வெற்றியில் பெருமை உண்டு. அவர்கள் இறுதித் தாக்குதல் மிகச் சிறந்த முயற்சி. நம் இல்லந்தவிர, வேறு எந்த இல்லத்தையும் அது