பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாத்துரையம் - 8

224 || கஞ்சி இதைச் சொல்லாமல்போனால், அந்தப் புகழுக்கு நான் உண்மையில் தகுதியற்றவனே ஆவேன் என்று எண்ணுகிறேன்.”

“உங்களில் பலர் 'இந்தப் புதிய தலைவர் நம் பழைய மரபுகளையும் உரிமைகளையும் போக்க வந்திருக்கிறார்; அம் முயற்சியை எவ்வழியாலும் எதிர்க்க வேண்டும்' என்று முணுமுணுப்பதை நான் கேட்டிருக்கிறேன். (மாணவரிடையே பெருத்த கலசலும் பரபரப்பும்).'வாழ்க ரக்பி மரபுரிமைகள், ஒழிக மாறுதல் விரும்பும் புதிய ஆட்சி,' என்ற கூக்குரல் ஆதரவு பெற்று வருவதையும் நான் அறிவேன். ஆனால், உங்களால் பாராட்டப் பட்ட தோழன் என்ற முறையில் கூறவிரும்புகிறேன்-அதை நீங்கள் எப்படி எடுத்துக்கொண்டாலும் அது உங்கள் பாடு, உங்கள் உரிமை - உங்கள் கூக்குரல் பழைய புகழை வளர்க்காது, அதைக் கெடுக்கக்கூடச் செய்யும். புதிய தலைவருடைய முயற்சிகள் இனிப்பானவையாயில்லாமலிருக்கலாம். ஆனால், பள்ளியின் கட்டுப்பாட்டை வளர்த்து, புகழைப் பேணுபவையாகவே அவை அமைந்துள்ளன என்று நான் உறுதியாகக் கருதுகிறேன். த்தகைய முயற்சியில்லாவிட்டால் பழம் புகழ் நீண்டநாள் நிற்காது. தந்தைவழிச் செல்வத்தைப் பேணிச் செலவழிக்கும் முயற்சியில்லாதவன் செல்வநிலை விரைவில் சீரழிவது போல, அது விரைவில் அழிவுறும்.

"இந்த இரண்டு செய்திகளிலும் உங்களிடையே கருத்து வேறுபாடு இருக்கலாம். அதை வரவேற்கிறேன். என் கருத்தை நிங்கள் பின்பற்ற வேண்டுமென்றில்லை. ஆனால், நீங்கள் இது பற்றிச் சிந்தியுங்கள். உங்களுடன் உழைத்து உங்கள் புகழில் பங்கு காண்டு பிரிந்து செல்லும் சமயத்தில், உங்களுக்கு என் அன்புரையாகவும் அறிவுரையாகவும் இதைக் கொள்க. அது நாளடைவில் பயன்தரும் என்றும் நம்புகிறேன்.”

"ரக்பியின் பழம்புகழ் பெரிது. அதை நீங்கள் உங்கள் வாழ்வில் இன்னும் பெரிதக்கியுள்ளீர்கள். இனி அது புதிய தலைவர் ஆட்சியின் பயனாக இன்னும் வளரும் என்றும் நம்புகிறேன். வணக்கம்”

கோடையிடி இடித்து நிறுத்தியதுபோல மாணவரிடையே

சிறிது நேரம் அமைதி குடிகொண்டிருந்தது.