இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
டாம் பிரௌணின் பள்ளி வாழ்க்கை
1225
பின் மீண்டும் “வாழ்க ரக்பி, வாழ்க புரூக்” என்ற குரல்கள் எழுந்தன. கசப்பான மருந்து தரும் தாயிடம் வன்சினங் காட்டும் பிள்ளைபோல் மாணவர் சமூகம், புரூக்கின் அறிவுரையால் சிறிது கசப்படைந்து, பின் தன் இயற்கைப் பாசமும் ஆர்வமும் மீதூரக் கிளர்ந்தெழுந்தது.
புரூக் எதிர்பார்த்த பயன் முடிவில் ஏற்பட்டது. மாணவர்களில் பலர் அன்று முதல் இரண்டு செய்திகளையும் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினர்.