டாம் பிரௌணின் பள்ளி வாழ்க்கை
227
மரபையோ பேச்சுரிமையோ அவர் மாற்றிவிடாத காரணத்தால் தான்! ஆனால், கூறுவதைச் செயலில் கொண்டு வரும் காரியம் எவ்வகையிலும் எளிதன்று. அவர் தன் கடமையில் ஒரு சிறிதும் பிறழவில்லை. தம் வேலையில் தாமே கண்டிப்புச் செய்து கொள்கிறார். ஆகவே, அவர் கண்டிப்பைத் தளர்த்துவதோ மீறுவதோ அரிது. விரும்புபவர்களும் சரி, விரும்பாதவர்களும் சரி, அவரைப் பின்பற்றியே ஆக வேண்டியிருக்கிறது. அவரை எதிர்த்துக் காரியம் கொண்டு போவது என்பது முடியாதது.
66
'அறிஞர் போக்கை விரும்பாதவர்கள் கூறும் குற்றச்
சாட்டுத்தான் என்ன? அவர் பழைய மரபுகளையும் பழக்கங்களையும் அடக்கி அழிக்கிறார் என்று கூறப்படுகிறது. உங்கள் எல்லாருக்கும் தெரியும், நான் ஆதிக்கத்தை எதிர்க்காமல் அப்படியே நிலத்தில் கிடந்து வரவேற்பவன் அல்லன் என்று. அவர் குளிப்பது கூடாது என்று இயற்கை அமைதியை மீறினால், அல்லது உதைபந்து, மரப்பந்து, ஆடக்கூடாது என்று கூறி ரக்பியின் புகழுக்கு ஊறுதேடினால், உங்கள் அனைவரையும் ஒருபடி முன்சென்று தாண்டி நான் அதை எதிர்ப்பது உறுதி. ஆனால் நாம் காண்பது என்ன அவர் அவற்றை அழிக்க முனையவே இல்லை, நேர்மாறாக அவற்றை ஊக்கிவளர்க்கவே பாடுபடுகிறார் என்று காண்கிறோம். நம் பந்தய ஆட்டத்தின் கடைசிக் கூட்டத்தில் அவர்தம் மனைவியாருடன் மாடியில் வந்து நின்று அரைமணி நேரம் ஆட்டத்தைக் கண்டு களித்து நம்மை ஊக்கியதை யார் அறியமாட்டார்கள்?” (“வாழ்க அறிஞர், வெல்க ரக்பி' என்ற முழக்கம்.)
-
"மாணவர்களுடைய குடியாட்சி முறையை ஒழித்து அவர் நேரடியில் அடக்குமுறை செய்ய முனைகிறார் என்று சொல்லமுடியுமா? அப்படியானால் நான் அவர் ஆட்சிக்காக உங்களிடம் பரிந்து பேச வரவேமாட்டேன். நேர்மாறாக அவரை எதிர்ப்பதில் உங்கள் முன்னணியிலேயே நான் இருப்பேன். ஆனால், அவர் குடியாட்சி மரபுகளுக்கு முழு மதிப்புக் கொடுக்கிறார். இதற்கு வேறு சான்று வேண்டியதில்லை. அவர் வெளிப்படையாகக் கண்டிக்கும் செயல்களைக்கூட, அவர் குடியாட்சி மரபு மீறி அடக்க முயற்சி செய்யவில்லை. தலைவர் என்ற முறையில் தம் கண்டிப்பைப் பயன்படுத்தியே அவற்றை