|| - -
228 ||
அப்பாத்துரையம் – 8
எதிர்க்கிறார். அந்தக் கண்டிப்பை நீங்கள் எதிர்த்து பார்க்கிறீர்கள். பார்த்தவர்கள் அறிவீர்கள், அது எஃகுக் கண்டிப்பு என்று. அதை எதிர்ப்பவர்கள் கருங்கற்பாறையை எதிர்த்து மோதும் அலை ஆகின்றனர்.”
"உங்கள் பக்கம் இளமை இருக்கிறது. ஆங்கிலக் கல்வி நிலையங்களின் குடியாட்சி மரபு தந்த உரிமை இருக்கிறது. இரண்டையும் நீங்கள் நன்மைக்கும் பயன்படுத்தலாம்; தீமைக்கும் பயன்படுத்தலாம். ஆட்டக் களத்தில் அதன் நன்மையைப் பார்க்கிறோம். உங்கள் ஏட்டுக் கல்வியில், சமயவாழ்வு, ஒழுக்கம் ஆகியவற்றில் அதன் குறைபாட்டைக்காணலாம்.உங்கள் ஓய்வு நேரச் சுதந்திர வாழ்வில் அதன் முழுத் தீமைகளையும் பெறுகிறீர்கள்.”
“அறிஞர் ஆர்னால்டு உங்கள் உரிமையை, சுதந்திரத்தை அகற்ற எண்ணவில்லை. வளர்க்கவே விரும்புகிறார். ஆனால், அதே சமயம் அவற்றை நீங்கள் தவறான வழியில் பயன்படுத்தாமல் தடுக்கவும், நல்ல வழியில் பயன்படுத்தும்படி ஓரளவு உங்களைக் கட்டுப்படுத்தித் தூண்டவும் முயற்சி எடுத்து வருகிறார். உங்களில் நல்லவர், உயர்ந்த நோக்கமுடையவர் அவருடன் இதில் ஒத்துழைப்பதே தகுதி என்றும், அதன் முலம் உண்மையான குடியாட்சி மரபு வலுப்பட்டு வளரும் என்றுதான் நினைக்கிறேன். அத்துடன் எதிர்க்க எண்ணுபவர் வெற்றியும் அடையவில்லை என்பதை நீங்கள் காண்கிறீர்கள். அவர்கள் செய்யக்கூடியதெல்லாம், குடியாட்சியின் பெயரால் அதன் முழு வெற்றியையும் புகழையும் சிறிதுகாலம் தடுத்து வைப்பதே."
சி
“அறிஞர் ஆர்னால்டு போன்ற ஆற்றல் வாய்ந்த தலைவர் இருக்கும் வரை வெற்றி தோல்வி பொறுப்பு முழுவதும் அவரிடமே இருக்கும். ஆகவே, ஒத்துழையாமை மனப்பான்மையை உதறி எறிந்து மனமார்ந்த ஒத்துழைப்பைத் தரும்படி எல்லோரையும் கேட்டுக்கொள்கிறேன்.
பேட்டர் புரூக்கின் இவ்வறிவுரையையும் விளக்கமும்
அமைதியுடன் ஏற்கப்பட்டது. அதனை எதிர்த்து முணுமுணுத்தவர் மிகுசிலரே. அவர்கள் எப்போதும் பிறர் அன்பை எதிர்பாராமல், தம் ஆற்றலால் பிறரை அடக்கியாண்டு, பெரும்பாலான பள்ளி உரிமைகளைத் தம் உரிமைகளாக்கியவர் களேயாவர்.