டாம் பிரௌணின் பள்ளி வாழ்க்கை
229
ஆயினும் மிகுபலர் அவர்களை எதிர்க்க அஞ்சியவர் களாதலால், புரூக்கின் பேச்சினால் அகத்தே ஏற்பட்ட மாறுபாடு புறத்தே புலனாகவில்லை.
டாம் பிரௌணுக்கு இப்பேச்சு ரக்பி பள்ளியின் நிலையை அறிய ஒரு பீடிகையாக மட்டுமே இருந்தது. அவன் அப்பேச்சை முற்றிலும் வாங்கிக்கொள்ள முடியவில்லை. அறிஞர் ஆர்னால்டைப் பற்றிய ஓர் அச்சமும் மதிப்பும் ஏற்படமட்டுமே அது காரணமாயிருந்தது. ஆனால் ஈஸ்டுக்கு இந்நிலை இல்லை. பள்ளியின் மரபுகள் வகையில் அவன் மாறாப்பற்றும் மட்டற்ற பெருமையும் உடையவனாயிருந்தான். தலைவரின் போக்கு அவன் எதிர்ப்பையே பொதுவாகத் தூண்டியிருந்தது. ஆனால், மரபுகளிடையே சிறுபிள்ளைகளை ஏலமாட்டாப் பிள்ளைகளை வலிமையுடைய ஆதிக்க மாணவர் அடக்கியாள்வதும் கொடுமைப் படுத்துவதும் மட்டும் அவனுக்கு முற்றிலும் பிடிக்கவில்லை. ஆனால், இத்துறையிலும் அவன்தன்
,
கண்டனத்தை வெளிப்படையாகக் கூற முடியவில்லை. அவன் உள்ளூர அவ்வாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளுக்கு அஞ்சினான். அந்த அச்சத்துடன் பொதுவாகத் தலைவர்கள் போக்கையும் கண்டிப்பையும் கண்டு அஞ்சும் அச்சமும் கலந்திருந்தது.போலி அச்சமும் நல்லச்சமும் கலந்த இடத்தில், போலி அச்சகத்தின் வலுஇரட்டிப்பாயிற்று.
புருக் பேசியபோது பெரிய பையன்களின் முணுமுணுப்பைச் சிறிய பையன்களின் ஆரவாரம் மெள்ள வென்றது. பிள்ளைகளிடையே ஆட்டக் களத்தின் வெற்றிகள் மூலம் புரூக் அடைந்த புகழ் இருந்த சிறு வெறுப்பையும் படிப்படியாக வென்றது. புரூக் இவ்வகையில் அடைந்த வெற்றியும் அவர் இடைவிடாது தலைவர் பண்புகளில் காட்டிய ஆர்வமும் தலைவர்க்கெதிரான மனப்பான்மையைச் சிறிது சிறிதாகவேனும் குறைத்தே வந்தது.
ஆங்கிலப் பொதுமக்களிடையே பழமைப் பற்று மிகுதி.அது ஆழ்ந்து வேரூன்றியது. காலத்தின் போக்கும் கால உணர்வும் அவ்வக்காலத்தில் சீர்த்திருத்தங்களுக்கு வழி வகுத்தாலும், இவ்வுள்ளார்ந்த பழமையார்வம், அம்பு கிழித்த நீர் மீண்டும் கூடிவிடுவது போல எளிதில் திரும்பவும் வந்து அடைகிறது.