பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

||– –

அப்பாத்துரையம் – 8

திடுமென ஒருபுறமிருந்து ஒளிக்கதிர் வீசியதும் எல்லார் கண்களும் அப்பக்கம் திரும்பின. தலைமை ஏவலாள் கையில் ஒரு விளக்குடன் மாடிப்படியிலிருந்து இறங்கி வந்தான். அவனைத் தொடர்ந்து நீண்ட கறுப்பு அங்கியும் தலையணியும் அணிந்து, கையில் திருநூலுடன் ஒரு பெருமித வடிவம் ஆரஅமர இறங்கி வந்தது, அதுதான் தலைவர் ஆர்னால்டு என்று மாணவருக்குச் சொல்ல வேண்டியதில்லை. பிள்ளைகளிடையே நிலவிய அரையிருள் மட்டுமன்று, அரை குறை அரவமும் முற்றும் அகன்றது. இருளை அகற்ற ஒளியைக் கொண்டு வந்தது போலவே, ஓசையை அகற்ற மோனத்தையும், அசட்டை மனப் பான்மையை அகற்றக் கவனத்தையும் அவர் தம்முடன் கொண்டு வந்தாரோ என்று தோன்றிற்று.

அவர் பிள்ளைகளின் நடுவே நடக்கிறார். அவர்கள் இருபுறமும் வழிவிட்டு நிற்கின்றனர். நடுவிடத்தில் வார்னர் இருக்கையின் அருகிலுள்ள தம் தனியிருக்கையின் முன் சென்று நின்று ஒரு கண நேரம் தனி வழிபாடாற்றி அவர் அமர்கிறார். அவர் குறிப்பறிந்து இல்லத் தலைவர்களும்; அவர்களின்பின் மாணவர்களும் அமர்கின்றனர்.

வார்னர் ஒவ்வொருவராகப் பிள்ளைகள் பெயர்களை வாசிக்கிறான். ஒவ்வொருவராக எழுந்து பள்ளிக்கு வணக்கம் செலுத்தி, 'இதோ' என்று கூறி அமர்கின்றனர். தலைவர் பேரளவில் கண்டிப்புடையவர், மாணவர்களை அடக்குபவர் என்று டாம் கேள்விப்பட்டிருந்தான். அந்த ஆர்னால்டு இவராயிருக்கக் கூடுமா என்று அவன் வியப்படைந்தான். ஏனெனில் அவர் யாரையும் எதையும் கவனிப்பதாகவே தோன்றவில்லை. தம் ஒழுங்கைத் தாம் காப்பவர்போலச் செம்மாந்து, முழுதும் தன்னிறைவுடன் அமைந்து வீற்றிருந்தார்.

வார்னர் கடைசிப் பெயர்களை வாசிக்கும்போதே, அறிஞர் தம் கையிலுள்ள புத்தகத்தை திறக்கிறார். முன்பே அதில் ஒரு பக்கம் அடையாளம் வைக்கப்பட்டிருக்கிறது. கடைசிப் பெயர் முடிந்து, வார்னர் பெயர்ப் பட்டியை மூடியதும் அவர் எழுந்து நிற்கிறார். அவர் விரல்கள் புத்தகத்தின் திறந்த பக்கத்தில் அன்றைய தொழுகை வாசகத்தின் மீது பதிகிறது. அவர்