பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாம் பிரௌணின் பள்ளி வாழ்க்கை

233

பார்வையோ நேராக, தம் மூக்கையோ தாம் பார்ப்பவர்போல அமைந்துள்ளது. ஆயினும் எல்லாவற்றையும் அவர் கவனிக்காவிட்டாலும், ஒழுங்குக்கு ஊறு ஏற்படும் இடத்தை மட்டும் அவர் துருவுகிறார் என்ற தோற்றம் இருந்தது. ஏனெனில் ஊசி விழும் அரவம் எந்தப் பக்கமாவது கேட்டால்கூட, அவர் காதும் கண்ணும் அந்தப்பக்கம் சாய்வதுபோல் தோற்றிற்று.

தொழுகை அமைதியுடன் முடிந்தது. அறிஞர் முகத்தில் இருந்த செம்மாந்த அமைதி செவ்விய முறுவலாகப் படர்ந்தது. தொழுகை நேரம் முடிந்ததென்பதற்கு அது அறிகுறி அருகிலுள்ள வார்னரையும் பிறசில தலைவர்களையும் நோக்கி, இன்று பாட்டு நாளன்றோ? என்றார். அவர்கள் தலையசைத்தனர். “சரி, தேறலும் பருகுநீரும் இன்று சற்றுத் தாராளமாக வழங்கப்படும். கட்டுப்பாடற்று அரைமணி நேரம் களித்து ஆடிப்பாடி இருங்கள். தொடக்கத்தில் உங்களுடன் இருந்து, அதில் சிறிது பங்கு கொண்டு, நடுவில் எழுந்து போய்விடுவேன்,” என்றார் அவர்.

அவர் மாணவர் மீது பெற்ற செல்வாக்கின் மறை திறவை டாம் அப்போது உணர்ந்தான். நல்ல காரியங்களில் மாணவருள் ஒருவராகவும் அல்லாதவற்றில் தலைவராகவும் அவர் நடந்து கொண்டார் என்பதை இன்றே அவன் கண்டான். அவர் இருக்கும் போதே அவர் குறிப்பறிந்து தலைவர்கள் கட்டுப்பாட்டைத் தளர்த்தத் தொடங்கினர். அவர் உடனிருந்தும் அவர் புன்முறுவல் அவர்களை ஊக்கிற்று. மணிப்பொறியின் உயிருறுப்பு சிறிது அசையத் தொடங்கியதும் பிற உறுப்புகள் ஒடியாடுவதைப் போல, மாணவர்கள் கட்டுத்தளர்ந்து ஆரவாரித் தெழுந்தனர். சிறிது நேரத்திற்குள் எல்லாம் ஒரே ஆடலும் பாடலும் கொம்மாளமும் ஆயிற்று. தலைவர் இத்துணையும் பார்த்தும் பாராததுபோல் இருந்ததுடனன்றி, மிகுதி ஆடி ஆரவாரித்தவர் களைத் தட்டிக்கொடுத்து ஊக்கினார். பத்துக்கணங்கள் செல்லுமுன் அவர் வந்தபடியே, ஆனால் பெருமிதத் தோற்றமின்றி, நழுவினார்.

எல்லாரும் ஆடிப்பாடி அலுப்படைந்தனர். சிலர் தூங்கி வழியக் கூடத் தொடங்கினர். அரைமணி இறுதியில் வார்னர் மட்டும் ஆடி ஓயாத குரலில் 'பாட்டு நேரம் முடிந்தது. யாவரும்