பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாம் பிரௌணின் பள்ளி வாழ்க்கை

235

“ரக்பி பள்ளியில் சனிக்கிழமை போன்ற சுதந்தர நாட்களில் முழுச் சுதந்தரத்தையும் பெரிய பிள்ளைகள், சிறப்பாகப் பிறரைக் கொடுமைப்படுத்தும் பெரிய பிள்ளைகள்தாம் அனுபவிக் கின்றனர். மற்றவர்கள் பகலெல்லாம் அனுபவித்ததற்கு வட்டியும் முதலும் சேர்த்து இரவில் படுக்குமுன் கொடுத்தாக வேண்டும். புதுப்பிள்ளைகள், சிறு பிள்ளைகள், கீழ்வகுப்புப் பிள்ளைகள் ஆகியவர்களுள் எவரையும், வலியோர் பிடித்துப் பெரிய கம்பளிகளில் போட்டு, நாலுபேர் நாலு திசையில் பிடித்து நிலத்தளத்துக்கும் மோட்டுத் தளத்துக்குமாகப் போட்டுப் புடைப்பார்கள். இதற்கு அஞ்சித்தான் பெரும்பாலான பிள்ளைகள் அது முடியும்வரை ஒளிந்து திரிகிறார்கள்,” என்று

ஈஸ்ட் விளக்கினான்.

அவன் வயதுக்கும் அனுபவத்துக்கும் டாம் வீரமான பையன்தான். ஆனால் இது கேட்டு அவன் உள்ளெலும்புகள் கிறீச்சிட்டன. “பள்ளித் தலைவர்களும் முதல்வர்களும் இதற்கு இணக்கம் அளிக்கிறார்களா?" என்று கேட்டான். ஈஸ்ட் சிரித்தான். “ரக்பி பள்ளியின் ஆட்சி குடியாட்சி என்பதை மறுந்துவிட்டாயா? குடியாட்சியின் எழுதா மரபுகளுள் இதுவும் ஒன்று. தலைவர்கள் முதல்வர்கள் இணக்கமும் இதில் தேவையில்லை. மறுப்பும் செல்லாது. ஆனாலும் இது திறந்த விளம்பரச் செயலன்று. மரபானாலும் மறைந்தே வழங்குகிறது,' என்றான்.

'சரியோ தப்போ ! விருப்பமோ, வெறுப்போ!' மரபாய் விட்ட ஒன்றினை விட்டுத் தப்பி மறைந்து உலவுவதை டாம் விரும்பவில்லை. 'இதனால் என்ன வந்தாலும் வருகிறது. நான் மறைந்து ஒளிக்க விரும்பவில்லை. இப்பெரும் பள்ளியில் இடம் பெறுவதற்குரிய தேர்வுகளுள் ஒன்றாக இதை நான் மேற்கொள்ளவே விரும்புகிறேன்.'

நண்பன் முடிவை ஈஸ்ட் மெச்சி அவனை ஆரவாரத்துடன் அணைத்துக் கொண்டான். 'என் முடிவும் இதுவே, டாம்! சாவதானலும் அஞ்சி அஞ்சிச் சாவானேன்? சாவை எதிர்நோக்கி நிற்பவனுக்குச் சாவு ஒரு பொருட்டன்று.வாழ்வும் விலையுடையது! வா, நாம் அறைக்குச் சென்று வழக்கம்போலிருப்போம். அழைப்பு வந்தால் ஏற்போம்' என்றான்.