பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாம் பிரௌணின் பள்ளி வாழ்க்கை

237

பார்க்கிறீர்கள்?" என்று ஃவிளாஷ்மன் கூவினான். ஈஸ்ட் மீது காட்ட விரும்பினான் அவன், ஆனால் ஈஸ்டும் டாமும் வாளா இருந்தனர். மற்றப் பெரிய பிள்ளைகளிலும் ஒருவர் இருவர்தாம் உதவினர். வெளியே இழுக்கப்பட்ட பின்னும் சிறுவன் ஃவிளாஷ்மன் காலைப் பிடித்துக் கொண்டு, "ஃவிளாஷி அணணேன், ஃவிளாஷி அண்ணேன் என்னை விட்டுவிடு. நான் உள்ள நாள் முழுவதும் உனக்குக் குற்றேவல் குறும்பணி செய்கிறேன். என்னை விட்டுவிடு,” என்று கெஞ்சினான்.

"ஃவிளாஷ்மனின் கொடுங்குணம் பெரிய பையன்களுக்குக் கூட வெறுத்துவிட்டது. அவர்களில் ஒருவன் துணிந்து, 'ஃவிளாஷி இதோ பார், பேட்டர் புரூக் கூறியது சரியாயிருக்கிறது. தானாக விரும்பாது கெஞ்சுபவர்களையும் இழுத்துச் செல்வதானால், இந்த மரபு ஒழிக்கத்தக்கது என்றுதான் நான் கருதுவேன்' என்றான்.”

மற்றப் பெரிய பிள்ளைகளின் பார்வையிலும் தனக்கு உடந்தையான பண்பு இல்லை என்று கண்டு, ஃவிளாஷ்மன் அந்தப் பையனை விட்டு விட்டான்.

தோல்வியைப் பெருந்தன்மையுடன் ஒத்துக்கொள்ளும் குணம் ஃவிளாஷ்மனுக்கு இல்லை. தானாக எவரேனும் வருவார்கள் என்று நீங்கள் கருதுகின்றீர்களா?' என்று மனக்கசப்புடன் கேட்டான்.

66

ஏன்? இதோ ஓட்டப்பந்தயங்களில் முதல்வனான ஈஸ்ட் வரவில்லையா? இதோ இன்றுவந்த சிறுவன் டாம் வரவில்லையா? இது போதாதா உனக்கு?” என்றான்.

குதிபந்தாக ஆட்டப்பட இருந்தவர்களும் கூத்தாட்டமாடக் கூடியவர்களும் ஒன்றகூடி இடை வழிகள் கடந்து சென்றனர். ஏழாம் எண்ணுள்ள அறை மற்ற எல்லா அறைகளையும்விடப் பெரிதாயிருந்தது. அதில்மிகப்பல பிள்ளைகள் ஒழுங்காகப் படுப்பதற்குரிய மிக நீண்டகன்ற திண்ணிய கம்பளமொன்றும் இருந்தது. கம்பளத்தை அகல விரித்து, பக்கத்துக்குப் பன்னிரண்டு பேராகப் பிடித்துக் கொண்டனர்.

முதலில் ஈஸ்ட் குதி பந்தாடப்பட்டான். கம்பளத்தை மேலும் கீழும் ஆட்டிக்கொண்டே ஒன்று இரண்டு மூன்று