பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(238

||– –

அப்பாத்துரையம் – 8

என்றவுடன் கம்பளம் உயர உந்தி வீசப்பட்டது. ஈஸ்ட் மோட்டுத்தள நோக்கி வேகமாக உந்தப் பட்டான். மோட்டில் மோதிக் கொள்ளாதபடி அவன் கைகொண்டு மோட்டைத் தடுத்துக்கொண்டான். மூன்றாவது தடவையுடன் அவன் முறை தீர்ந்தது. அடுத்த பையன் ஈஸ்டைப் போல அமைதியாய் மூன்று குதியையும் ஏற்கவில்லை. அவன் கூக்குரல்கள் பள்ளி முழுவதிலும் கேட்டன. மூன்றாவதாக டாம் கம்பளத்தில் ஏற்றப்பட்டான். ஈஸ்டின் அறிவுரையையும் முன்மாதிரியையும் பின் பற்றி அவன் அமைதியாயிருந்தான்.

ஒன்று இரண்டு மூன்று என்னும்போது விளையாட்டு வினையாகவில்லை. அதன்பின் ‘ஆ' என்ற கூக்குரலுடன் கம்பளம் 'வில்' போல அவனை மேலே தூக்கி வீசிற்று. முதல் தடவை யிலேயே மோட்டில் டாமின் முட்டுக்கள் மோதின. அதன்பின் அவன் கீழே விழும்போது, குடல் தனியாக மேலே தங்கிவிட்டது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது. வேறு எந்த இடமாகவேணும் இருந்தால் அவன் வாய்விட்டுக் கதறி இருப்பான். ரக்பியில் தான் கோழை என்று யெரெடுக்கக் கூடாதென்ற எண்ணம் அவன் தன்னை அடக்கிக்கொள்ளும்படி செய்தது.

முதல்வீச்சுக் கடுமையானது என்பதைக் கூத்தாட்டுபவர் அறிந்தனர். ஃவிளாஷ்மன் நீங்கலாகச் சிறுவர், பெரிய பிள்ளைகள் அத்தனைபேரும் டாமின் வீரத்தை மெச்சிப் புகழ்ந்தார்கள். சிலர் 'நோவு மிகுதியா?' என்று கரிசனையுடன் உசாவினார்கள். டாமுக்கு உடல் நோவு பெரிதனாலும் புதுத் தோழர்களின் இப்பாராட்டுதலால் அவனுக்கு அகத்தே மகிழ்ச்சி ஏற்பட்டது. அது புறநோவைத் தாங்கும் வலிவையும் ஊக்கத்தையும் அவனுக்குத் தந்தது.

ஈஸ்டும் டாமும் அன்று அடைந்த வெற்றி இதனுடன் நிற்கவில்லை. அவர்களை முன்மாதிரியாக்கி மீந்திருந்த ஒன்றிரண்டு பிள்ளைகளும் அமைதியாகக் குதியாட்டத்தை ஏற்றனர். பிறர் நோவும் கதறலும் கண்டு உள்ளம் மகிழும் ஈன இயல்புடைய ஃவிளாஷ்மனுக்கு வழக்கமான கிளர்ச்சிக்கு வழியில்லாது போயிற்று. கடைசிக் குதியாட்டங்களில் அவன் கை கொடுப்பதையே நிறுத்திவிட்டான்.