பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாம் பிரௌணின் பள்ளி வாழ்க்கை

239

ஃவிளாஷ்மனின் சோர்வறிந்த அவன் நண்பன் “இப்போது வேறு முறையைக் கையாளுவோம். இது சப்பென்று போய் விட்டது. இரண்டு பையன்களை ஒருங்கே குதியாட்டுவோம்,” என்றான்.

ஃவிளாஷ்மன் முகம் ஒளி வீசிற்று.

ஆனால் ஆடவந்தவர் அனைவர் முறையும் முடிந்து விட்டது. புதிதாக எவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அத்துடன் அந்த அறைக்குரிய சட்டாம்பிள்ளை வருவதாக யாரோ முன்கூட்டி வந்து எச்சரித்தனர். ஆகவே, கூத்தாட்டமும் குதியாட்டமும் அத்துடன் முடிவுற்றன.