பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. வழிபாட்டு மேடை

L

படுக்கையில் படுத்தது எப்போது, கண்ணயர்ந்தது எப்போது என்பது டாமுக்குத் தெரியாது. உறங்கியது எவ்வளவு நேரம் என்பதும் தெரியாது. ஆனால், வழக்கமாக உறங்கி எழும் நேரத்தில் அவனால் கைகால்களை அசைக்க முடியவில்லை. அத்துடன் அவன் உள்ளமும் மூளையும் வேலை செய்ய மறுத்தன. எனவே, தான் இருப்பது எங்கே என்பதும் விளங்க வில்லை. எழுந்திருக்க முயலாமல் பின்னும் சற்று நேரம் ஓய்ந்து படுத்தான். ஒவ்வொன்றாக முந்தின நாள் நிகழ்ச்சிகள் அவன் மனக் கண்முன் திரைப்படங்களாகக் கடந்து சென்றன. ஒரு நாளில் பள்ளியின் வாழ்வில் அவன் கொண்ட பங்கு அவனுக்கு உள்ளூரப் பெருமித உணர்வும் உவகையும் தந்தது. உடல்வலி அதன்முன் அவனுக்கு ஒரு தூசாகவே இருந்தது. அவன் ஊக்க மடைந்தவனாய் எழுந்து படுக்கையில் அமர்ந்தான்.

காலில் நோவு, இடுப்பில் வலி,தோள் பட்டைகளில் நமைச்சல் - முதுவெலும்பு முழுவதும் உளைச்சல் - இத்தனைக்கும் முட்டுக்கொடுத்து அவனைக் கிளர்ச்சியுடன் எழுந்து நடமாடச் செய்தது, அவன் அகமகிழ்ச்சி!

அடுத்தடுத்துள்ள படுக்கைகளில் ஒன்றிரண்டு பிள்ளைகள் எழுந்து உட்கார்ந்து கொட்டாவி விட்டனர். அதன் பின் சிறிது சிறிதாக அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர்.ஈஸ்ட் சற்று உருண்டு புரண்டு எழுந்து உட்கார்ந்தான். முந்தின நாள் ஆட்டத்தில் கால் சுளுக்கியதால் இரவில் அது வீங்கியிருந்தது. அவன் அதைத் தடவிக் கட்டிக்கொண்டிருந்தான்.ஆட்டநாளுக்கு அடுத்த நாளாகையால் அன்று நல்லகாலமாய்க் காலை நேரம் ஓய்வு நேரமாக இருந்தது. ஈஸ்ட் அதைப் பயன்படுத்திக் கொண்டு படுக்கையிலேயே அமர்ந்திருந்தான். மற்றப் பிள்ளைகளும்