பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாம் பிரௌணின் பள்ளி வாழ்க்கை

(241

எழுந்திருக்க விரையாமல் படுக்கையிலேயே கிடந்தும் இருந்தும் பேசியும் நேரம் போக்கினார்.

"இன்று ஓய்வு நேரம், அத்துடன் ஞாயிற்றுக் கிழமை. ஆகவே, பதினொரு மணிக்குத் தொழுகைக்குச் செல்லும் வரை படுக்கையிலேயே இருக்க முடியும். இது எனக்கு இன்று நல்லதாய்ப் போயிற்று. ஏனென்றால் நான் இன்று கிட்டத்தட்ட நொண்டி எதற்கும் அசையமுடியாத நிலையில் இருக்கிறேன்,” என்றான் ஈஸ்ட்.

ஆனால் அவன் எதிர்பாராத சில கடமைகள் அவனுக்கு இருந்தன. பள்ளியின் ஓய்வு தரப்பட்ட காலத்திலும் அவன் தலைமேற்கொண்டு போற்றிய பள்ளி மரபுகளின் படி கீழ் வகுப்புகளிலுள்ளவர்களுக்கு சிறப்பாக வலிமையற்ற

-

பிள்ளைகளுக்கு - ஓய்வு கிடைப்பதில்லை.

ஒவ்வொரு படுக்கையறைகளிலும் ஒரு மேலாள் இருப்பதுண்டு.அவன் பெரும்பாலும் ஆறாம்படிவ மாணவனா யிருப்பான். அவனுக்கென்று பெரிய படுக்கை, பிறரைவிடத் தணப்படுப்பருகில் வாய்ப்பான இடம், நல்ல மெத்தை தலையணைகள், படுக்கைக்கு நாற்புறமும் இழுத்து விடக்கூடிய திரைக் கொசு வலை ஆகியவை தரப்பட்டிருந்தன. மேலாளர் அந்த வாய்ப்புகளுடன் அமையவில்லை. பிள்ளைகளிடையே முறை வைத்து அவர்களிடம் குற்றேவல் பணி பெற்றனர். பாடம் படித்தாலும் படிக்காவிட்டாலும், ஆசிரியர்கள் சொல்லுகிற படி கேட்டாலும் கேட்காவிட்டாலும், இம்மேலாளர் சொல்கிறபடி கேட்டு அவர்களுக்குத் தொண்டூழியம் செய்தாக வேண்டும். இத்தொண்டூழியத்தில் மிகவும் இக்கட்டானது மேலாளருக் காகக் காலையில் வெந்நீர் கொண்டு வருவதேயாகும். பிள்ளைகள் எவருக்கும் காலையில் வெந்நீர் கிடையாது. எல்லாப் பிள்ளைகளும் தண்ணீராலேயே காலைக் கடன் கழிக்க வேண்டும்.ஆனால் முறைப்பிள்ளைகள், தாங்கள் தண்ணீரே வழங்கிக் கொண்டு, மேலாளருக்காகப் பள்ளி ஏவலாளிடம் கெஞ்சியும் இரந்தும் வெந்நீர் வாங்கிக் கொண்டுவரவேண்டும், கொண்டுவராவிட்டால் அவர்கள் வாழ்வில் தொல்லைகள் ஏற்படும். இதுமட்டுமன்று. இரந்து அரும்பாடுபட்டுக் கொண்டுவரும் வெந்நீரையும், குற்றேவேல் செய்யும் மற்றப்