டாம் பிரௌணின் பள்ளி வாழ்க்கை
243
சண்டையைக் கவனிக்கத் தொடங்கிய மேலாள் சட்டெனக் கைக்கடிகாரத்தைப் பார்த்து, “ஐயோ, மணி எட்டாய்விட்டதே! இன்னும் என் வெந்நீர் வரவில்லை, ன்று யார் முறை வெந்நீருக்கு?" என்று முழங்கினான்.
இவ்வகைக் கணக்குக்கு அமர்த்தப்பட்டிருந்த அறையின் மூத்தான் தன் பட்டியலைப் பார்த்து 'இன்றைய முறை ஈஸ்ட், ஹால் ஆகியவர்களது' என்றான்.
ஹால் உடனே புறப்பட்டான். ஈஸ்டோ தனக்குள்ளாக, ஆனால் பிறர் கேட்கும்படி ‘என்கால் அசைக்க முடியவில்லை. நான் போக முடியாது!' என்றான்.
மூத்தான் 'உனக்கு முடியுமோ, முடியாதோ! யாராவது போய் ஆக வேண்டும், அது உன் பொறுப்பு' என்று கூறிவிட்டுத் தன் காலணியை மாட்டிக்கொண்டு பெருமிதத்தொனியுடன் வெளியே புறப்பட்டுச் சென்றான். ஈஸ்ட் இன்னது செய்வது என்று தெரியாது விழித்தான்.
அச்சமயம் டாம் அப்பக்கம் வந்து, “உன்னிடமாக இன்று நான் செல்கிறேன். எனக்கு இந்த வாய்ப்பைக் கொடு,” என்றான். டாம் இடர் நீக்க உதவ வந்ததுடனன்றி அதையும் பண்புடன் ஒரு கோரிக்கையாக்கின. அருமை கண்டு ஈஸ்ட் அவனுக்கு மனமார நன்றி தெரிவித்தான்.
கையில் சாடிகளுடன் ஹால், டாம் ஆகிய இருவரும் நீண்ட இடைவழிகளைக் கடந்து சமையல் புரைக்குச் சென்றனர். சமையற்காரனோ எரிந்து விழுந்து, “எத்தனை பேருக்கோ கொடுத்தாய்விட்டது. இனிக் கிடையாது,” என்று முணுமுணுத் தான். ஆயினும் கெஞ்சிக் கூத்தாடி அவர்கள் சாடியை நிறைத்துக் கொண்டு வந்தனர். ஆனால், வழியில் ஐந்தாம்படிவ மாணவர் வழிப்பறி வேட்டையால் அவர்கள் பாதிவரைச் சிந்திவிட்டுப் பாதியுடன் இளைக்க இளைக்க வரவேண்டியதாயிற்று.ஆயினும் எதிரிகள் கைப்பட்டிருந்தால் அவர்கள் வெந்நீர் முழுவதையும் இழந்து பின்னும் சென்று புதிதாகக் கெஞ்சவேண்டியிருந் திருக்கும். இரண்டாம் தடவை கெஞ்சிப் பெறுவது இன்னும் அருமையாகப் போயிருக்கும்.