(244) ||
||– –
அப்பாத்துரையம் – 8
காலையில் பெயர்ப்பட்டி வாசிப்புத் தொடங்கிற்று. டாமும் மற்றப் புதிய மாணவர்களுடன் சென்று ஒருபுறம் உட்கார்ந்தான். எல்லாரும் அவரவர் சிறந்த ஆடையணிகளை அணிந்து வந்திருப்பதை டாம் கவனித்தான். நல்ல காலமாக அவன்அது பற்றி நாணவேண்டியதாயில்லை. அவன் தந்தை தந்த ஆடையுடன் ஈஸ்ட் செய்த அணித்திருத்தம் அவனுக்கும் நல்ல தோற்றத்தைக் கொடுத்திருந்தது. பள்ளியில் இந்த ஒரு நாளைக் குள்ளேயே அவன் நன்கு பழகிக்போய் விட்டாலும், முதல் தடவையாகப் பெயர்ப் பட்டியிலிருந்து தன் பெயர் வாசிக்கக் கேட்டபோது அவன் அடைந்த மகிழ்வுக்கு அளவே இல்லை. 'இதோ' என்ற அவன் குரல் அதற்கேற்றபடி மற்றப் பிள்ளைகளின் மட்டமான குரல்களிடையே கணீர் என ஒலித்தது. புத்தொலியை உணர்ந்த சட்டாம்பிள்ளை சற்றுத் தலை நிமிர்ந்து பார்த்துப் புன் முறுவல் செய்தார். அவர் தன்னைத் தனிப்பட வரவேற்று முகமன் கூறியதாக டாமுக்குத் தோற்றிற்று.
காலை உணவுக்குப்பின் டாமும் ஈஸ்டும் பள்ளி மாமனையிடத்துள்ளும் நகரிலும் சற்று உலவித் திரிந்தனர்.ஈஸ்டின் கால் குற்றேவல் வேலை என்றால் நோகுமளவு உலவுவதில் நோகவில்லை என்பதை டாம் கண்டு உள்ளூர நகைத்துக் கொண்டான். மரபுகளைப் புகழ்வதில் அவன் முதல் குரலெழுப் பினாலும், அதனைப் பின்பற்றுவதில் அவனுக்கு அவ்வளவாக ஆர்வம் கிடையாது என்பது இதன் மூலம் தெரிந்தது.
அது நவம்பர் மாதமாதலால் ஒன்பது மணிக்குத் தான் காலைவெயில் சுள்ளென்று அடித்தது. புல் மீது படர்ந்த பனி நீங்கவே மாணவர்கள் கிளர்ச்சியுடன் முற்றவெளிகளில் குழுமினர். சரளைக் கல் பரவிய பாதைகளிலும் மாணவர் ஒருவர் ஒருவராகக் கூடி உலாவினர். ஈஸ்ட்டாமின் கையில்தன் கையைத் கோத்துக்கொண்டு அவர்களிடையே உலவினான்.கூடியமட்டும் அவன் ஒவ்வொரு மாணவனைச் சந்தித்த போதும் டாமை அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தான். அத்துடன் அவன் போனதே அவனைப் பற்றி ஒரு முழுப் பண்போவியமே வரைந்து காட்டினான்.
மரப்பந்தைப் பக்கத்துச் சிறு களத்திலிருந்து மரங்களின் உச்சிகளுக்கு மேலாகத் தலைவர் மாடி எட்டும்படி அடிக்கவல்ல