பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(246

||- -

அப்பாத்துரையம் – 8

பிற்பகல் தொழுகை நேரத்தில் அவன் புறக்காட்சி கடந்து அகநிலை அமைதிகளில் கருத்துச் செலுத்த முடிந்தது.

மாலை நிகழ்ச்சி டாமின் வாழ்விலே செதுக்கப்பட்ட ஓர் அழியா உயிர்ச்சித்திரமாக விளங்கிற்று.

டாமைப் போலவே ரக்பி பள்ளியில் முதல் முதலாகத் தலைவர் ஆர்னால்டின் தொகையில் உள்ளத்தை ஈடுபடுத்திய மாணவர் பலர். பிற்கால வாழ்வில் தம் பெருமை முழுவதற்கும் அதையே கடை காலாகக் கொண்டவர்கள் அவர்களிடையே உண்டு. அவர்களுள் எத்தனையோ பேர் தம் வாழ்வில் அவ்ஒரு நாளில் செதுக்கப்பட்ட அறிஞர் ஆர்னால்டின் புகழுருவைச் சிறுசிறு முத்துக்களாகத் தீட்டி ரக்பியின் புகழ்மாலையில் கோத்துள்ளனர். ஆனால், அம்முத்து மாலையில், உருவில் சிறிதாயினும் ஒளியில் பெரிதாகத் திகழத் தொடங்கிற்று, டாம் அன்று தன் அகப்பண்பில் இழைத்துக் கோத்த சிறுமணி.

மாணவர் இருக்கைகள் வட்டவடிவில் வரிசையாக ஒழுங்குபடுத்தப் பட்டிருந்தன. ஆனால், ஒவ்வோர் இருக்கையும் ஒரே திசையில், ஒரே குறிநோக்கியிருந்தன. அவ்விடத்தில் மற்ற ருக்கைகளின் முழுப் முழுப் பார்வையையும் கவர்ந்த ஓர் உயர்மேடையும் அதன் மீது இன்னும் உயர்ந்த ஓர் இருக்கையும் சார்மேடையும் இருந்தன. அதில் சார்ந்து நின்றது நெடிய கடைசற்கோல் போன்ற ஓர் உருவம். அதன் கண்ணொளி மாணவர் அனைவர் முகங்களிலும் நிலவொளிபோலப் படர்ந்தது. அதன் குரல் இசைக் குழலின் ஓசை போலக் கேட்பவர் செவிவழி சென்று உள்ளத்தை இயக்குவதாயிருந்தது. தெளிவும், அமைதியும், அடங்கிய ஆர்வமும் அதில் கலந்திருந்தன.

ஞாயிறுதோறும் அவர் அதே இடத்தில் அதே நிலையில் நின்று அதே குரலை எழுப்பினாலும், அவை கேட்பவர் உணர்ச்சிக்கு என்றும் உவர்ப்பளித்ததில்லை.அவரது ஆர்வம் எப்போதும் புதிதாக, தம் ஊக்கத்தால் பிறரையும் ஊக்குவதாக இருந்தது.

கண்காணாத, காதினால் கேட்கப்படாத, மனத்தினால் எண்ணப் படாத ஒன்றைப்பற்றித்தான் அவர் பேசினார். ஆனால் அவர் இனிய ஆர்வமும் அது கண்கண்ட, காதினால் கேட் கேட்கத்தக்க, மனத்தினால் தொட்டறியப்படத்தக்க ஒன்றாயிற்று.