பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|––

248) ||-

அப்பாத்துரையம் – 8

சொல்லின் எழுத்து வடிவால் காவியம் எழுப்ப முடியும். ஆனால் தலைவர் ஆர்னால்டு அதன் ஒலி வடிவால் ஓர் உயிர் ஓவியம் எழுப்பி, அதனைச் சொல்லோசை நீங்கினும் நீங்காது நிலவும் உயிர்க்கோயிலாக்கும் வித்தை கற்றிருந்தார். கல்லும் செங்கல்லுமில்லாத அந்தக் கோயிலின் ஒவ்வொரு சிறு வடிவத்தை அவர் மாணவர் தம் வாழ்நாள் முழுவதும் அகத்தே சுமந்து திரிந்தனர். பல்லோர் கண்டும் மிகச் சிலர் உள்ளத்திலேயே பதியும் கற்கோயில் போலன்றி, அது கண்டவர், கேட்பவர் உள்ளங்கள் தொறும் நின்று நிலவி, அவர்கள் வாழ்வில் படிந்து, உலகில் நின்று உலவிற்று.

அதில் ஈடுபட்ட ஈடுபட்ட உள்ளங்களில் டாம் உள்ளமும்

ஒன்றாயிற்று.

அவர் சொற்கள் சொற்களாக மட்டும் இல்லை. அவர் அறிவு அவற்றுக்குப் பொருள் தந்தது. அவர் இதயம் அவற்றுக்கு உணர்ச்சி தந்தது. ஆனால் அச்சொற்களின் ஆற்றல் அவர் வாழ்வின் முழு ஆற்றலையும் பிழிந்து தருவதாயிருந்தது. அவர் கடவுட்பற்று மனித இனப்பற்றாக மலர்ந்து, ஆர்வத் தென்றலில் கலந்து, தொண்டார்வமாகிய மணமாகப் பரவி, எல்லார் உள்ளங்களிலும் அலை அலையாக உலவிற்று. ஒவ்வொருவர் உள்ளத்தினையும் அது ஒவ்வொரு வகையாக அவரவர் மனநிலைப்படி இயக்கினாலும், அதன் ஆற்றலில் ஈடுபட்டு அவர் வயப்படாதவர் மிகமிகச் சிலரே. உளப்பான்மையில் அவருக்கு அணுக்கமான ஒரு சிலர் நெருப்பின் தணலில் ஒளிரும் பசும்பொன் போல மிளிர்ந்தனர். அவர் புகழில் சிறிதும் ஈடுபடாதவர்கூடக் கற்சிலைபோல் நின்றனர். ஆனால், இரு கோடிக்குமிடையே நின்றவர்கள்தாம் மாணவரில் மிகப் பெரும்பாலானவர்கள். அவர்கள் அத்தனை பேரும் ஒரே வெள்ளமாக தண்மதிய நோக்கி எழும் ஒரே கடலலையாக, தம்மை மறந்து, தம் பொது வாழ்வின் சிறுமை மறந்து, ஓர் அரைமணி நேரமாவது மனித வாழ்வின் உயர்குறிக்கோள் சென்று செவ்வண்ண முகிற்குலங்கள் மீது தவழ்ந்தனர்.

ரு

சொற்களின் பொருளறியாதவர்களும் அதன் உணர்ச்சியில் கலந்தனர். அதனை அரைகுறையாக அறிபவர்களோ அவர் ஆர்வத்தில் மிகுந்தனர்.