பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாம் பிரௌணின் பள்ளி வாழ்க்கை

249

அறிஞர் ஆர்னால்டு பள்ளியில் செய்த ஆட்சி மற்ற எல்லாப் பள்ளித் தலைவர்களின் ஆட்சி போன்ற புற ஆட்சியன்று; அக ஆட்சியே என்பதை டாம் அன்று கண்டான். வீட்டில் தாய்க்கும் தந்தைக்கும் தங்கைக்கும் எழுதிய கடிதங்களிலெல்லாம், தலைவர் பற்றி அவன் ஓயாது உள்ளூரப் பாடிவந்த கல்லாப் புகழ்ப்பாக்களின் இனிய அடிகளும் தளைகளும் நிறைந்திருந்தன.

தலைவர் வீறார்ந்த உருவம், அவர் இனிய மலர்ச்சியுடைய முகப்பொலிவு ஆகியவை அவன் உள்ளத்தின் ஆழ்தடந்தடவி அதனுள் ஒரு பொன் கருவாக அமைந்தது. அது அவனை உடனடியாக மாற்றவில்லை. ஆனால் அவன் வளருந்தோறும் அது வளர்ந்தது. புறமாசுகளை அதுவே அகற்றி அவனை நாளடைவில் முழுதும் ஆட்கொண்டது.

பள்ளியில் சேர்ந்த மூன்றாம் நாள் டாம் முறைப்படி பள்ளியின் மூன்றாவது படிவத்தில் சேர்க்கப்பட்டான். பள்ளிப் பாடங்கள் தொடங்கின. முன்பே பள்ளிகளிலும் வீட்டிலும் அவன் புத்தகப் படிப்பில் மற்றப் பிள்ளைகளைவிட மிகுதியாக முனைந்தேயிருந்தான். ஆகவே வகுப்பில் அவன் தொடக்கத் திலேயே நடுவிடம் வகிக்கலானான். படிப்பு அவனுக்கு ஒரு சிறிதும் கடுமையாகத் தோன்றவில்லை. சோம்பித்திரியும் சிறுவர் கூட்டுறவு அவனுக்கு இப்போது இல்லை. ஓரளவு அவனுடன் ஊடாடித் திரிந்த ஈஸ்ட்கூட, அவன் மூன்றவாது படிவத்தில் சேர்ந்து தனி இருக்கையும் அறையும் பெற்றபின் அவனிடமிருந்து சற்று விலகியவனானான். இந்நிலையில் அவன் விரைவில் ஆசிரியர் அனைவரிடமும் பொன்னான நன்மதிப்புச் சான்றுகள் பெற்றான். அவன் அரையாண்டின் இறுதியில் வந்தாலும்கூட அடுத்த அரையாண்டில் ‘புதுப்பிள்ளைகளுடன் இருக்க வேண்டிய தில்லை; பழைய பிள்ளைகளுடன் இ டம் உயர்த்தப்படுவதற் குரியவனே' என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

பள்ளியில் தான் அடைந்த முற்போக்கு டாமின் களிப்பைப் பன்மடங்காக்கிற்று. அவன் வீட்டுக்கு எழுதிய கடிதங்களி லெல்லாம் அதுபற்றிப் பெருமிதத்தொனியில் எழுதி மகிழ்ந்தான். வீட்டில் தந்தையும் தாயும் அவற்றை எத்தகைய உணர்ச்சிகளுடன்