250
அப்பாத்துரையம் – 8
வாசித்து உரையாடியிருப்பர் என்பதை ஊகித்துக் கொள்ளலாம். தங்கையின் மறு கடிதம் ஒன்று குழந்தையின் இனிய பிணக்கு மொழிகளில் இதை டாமுக்குக் காட்டிற்று. “அண்ணா, நீ பள்ளிக்குப் போனதும் எனக்கு இப்போது விளையாட்டில் மனம் செல்லமாட்டேன் என்கிறது. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இப்போது என்னைப் பற்றிக் கவலையில்லை. உண்பார வீரச்சரிதங்களைப் பாடுவதற்குத்தான் நேரமிருக்கிறது. நான் ஏதேனும் கேட்டால், பணம் இருப்பதில்லை. உனக்கு மாதா மாதம் அனுப்புவதில் தன் அக்கறையாயிருக்கிறார்கள்,” என்று அந்தக் குழந்தை எழுதியிருந்தது.
ய
ள
குழந்தையின் கடிதத்தைத் தாய் பார்த்துச் சிரித்தாள். தந்தையோ உடனடியாக அதன் குறை தீர்க்க விரைந்தார். ஆகவே அடுத்த கடிதத்தில் குழந்தை முந்திய கடிதத்துக்கு வருத்தம் தெரிவித்தது. "அண்ணா, நான் முந்தின கடிதத்தில் ஏதோ தெரிந்தும் தெரியாமலும் எழுதியிருந்தேன். அதைப் பார்த்து நீ என்பேரில் வெறுப்புக் கொண்டிருப்பாய். நான் பொறாமை யுடைவள் என்று எண்ணியிருப்பாய். ஆனால், நான் உன் தங்கை, இன்னும் சிறு பெண்தானே! அத்துடன் அந்தக் கடிதமே என் குறையைத் தீர்த்துவிட்டது.நீ பார்க்குமுன் அம்மா பார்த்து என் மீது கோபப்படாமல் என்னைக் கட்டியணைத்துக் கேலி செய்தால். அப்பா முதலும் வட்டியும் சேர்த்து எனக்குத் துணிமணி, பொம்மை எல்லாம் வாங்கித் தருகிறார். ஆகவே, நீ என் கடிதத்தை மறந்து என்னை மன்னிக்க வேண்டும்.நீ வந்தவுடன் நான் நேரில் உன்னிடம் இந்தப் பிழைக்கு இரட்டிப்பாக அன்பாக நடந்துகொள்வேன்,” என்று கூறிற்று அவள் இரண்டாம் கடிதம்.
டாமின் உள்ளம் வீடு, பள்ளி என்ற இரண்டு மரபுகளின் பண்புகளையும் உட்கொண்டு வளர்ந்தது. அவன், வீடு செல்லும் போது தன் மிச்சப் பணத்தில் தங்கைக்கு வேண்டியவற்றை நிறைய வாங்கிக் கொண்டு சென்றான்.