பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. சேறும் சறுக்கலும்

ஆசிரியரின் நன்மதிப்புக்கு ஆளாய், படிப்பில் டாம் மேம்படமேம்பட, அவனுக்கும் ஈஸ்ட் முதலிய பல தோழருக்கும் டையே உள்ளதொலை அகலமடைந்து வந்தது. அட்டூழியக் காரர் திசைக்கு அவன் அவன் செல்லவுமில்லை; அவர்கள் அட்டூழியத்துக்கு உட்படுபவர் குழுவில் அவன் இடம் பெறவுமில்லை. ஆனால் இந்தச் சுமுகமான நிலைக்கு விரைவில் ஒரு முடிவு ஏற்பட்டது. முதலாவது, படிப்பில் அவனடைந்த மேம்பாடு தாண்டி ஆட்டக்களத்தில் அவன் மேம்பட்டு வந்தான். இது ஈஸ்டுடனும் மற்றப் பழைய தோழர்களுடனும் அவன் நெருங்கிப் பழக இடமுண்டாக்கிற்று. இரண்டாவதாக ஆசிரியர் நன்மதிப்பு மூலம் அவன் அடைந்த உயர்வு அடுத்த அரையாண்டில் அவனை மறுபடியும் கீழ் நான்காம் வகுப்பில் அனைவருடனும் ஒருங்கே இடம் பெறும்படி செய்தது.

பள்ளியின் வகுப்புக்களிடையே எல்லா வகுப்புக்களையும் விட மிகப் பெரிய வகுப்பு கீழ்நான்காம் வகுப்பே. கீழ்நான்காம் வகுப்புக் கடந்து மேல் நான்கின் வாயிலில் நுழையவேண்டு மானால் இலத்தீன் இலக்கணத்தில் பொதுவாகவும், கிரேக்க இலக்கணத்தில் சிறப்பாகவும், தேறுவது இன்றியமையாத தாயிருந்தது.இவ்அயல்மொழிகளின் தடை கடக்க முடியாத பலர் ஆசிரியர் எவ்வளவு முயன்றும் கீழ் நான்காம் வகுப்பை விட்டுச் செல்லாமல், அதில் அடைந்து கிடக்க வேண்டியதாயிருந்தது. அந்தப் பழம் பெருச்சாளிகளின் தொல்லையால் வகுப்பை நடத்துவதே ஆசிரியருக்கு அரிதாயிற்று. இல்லத்திலும் மற்ற மனைகளிலும் உள்ள குடியாட்சி மரபுகளை அவர்கள் தம் போக்குகளுக்கெல்லாம் இழுத்தடித்தனர்.

L

கீழ் ஐந்தாம் வகுப்பில் கால் வைப்பதற்கு முன்பிருந்தே டாம் ஆசிரியர் மதிப்பில் அடைந்திருந்த உயர்விலிருந்து அவன்