|| --
அப்பாத்துரையம் - 8
252 || படிப்படியாக இறங்க நேர்ந்தது. அவன் பள்ளி வாழ்வினிடையே அவ் அரையாண்டு சேறும் சறுக்கலும் நிறைந்த காலமாயமைந்தது. அவன் புகழொளி அப்போதெல்லாம் பலவகையில் அரையிருளில் ஆழ்ந்து, பனிமூடாக்கில் பட்டு மறுகிற்று. ஆயினும் சேற்றிலும் இருளிலும் அவன் நலிவுறும் இந்தக் காலங்களிலும், முதல் தொழுகை மேடையில் அவன் உள்ளத்தில் இருளிலும் அவன் நலிவுறும் இந்தக் காலங்களிலும், முதல் தொழுகை மேடையில் அவன் உள்ளத்தில் பதிந்த தலைவர் ஆர்னால்டின் சீரிய உருவம் முற்றிலும் உயிர்துடிப்பு மாறதிருந்தது. அத்துடன் அவன் சேற்றிலும் இருளிலும் முற்றிலும் துவண்ட காலத்திலும் இடையிடையே அத்தலைவரின் ஆற்றல்மிக்க கரங்கள் அவன் திசையில் நீட்டப்பட்டன. அவர் ஒளிக்கதிர்கள் அடிக்கடி இருளினூடாக மின்னலெனப் பாய்ந்து அவனை மீட்க அரும்பாடுபட்டன. பின்னாட்களில் டாம் தன் சென்ற காலத்தை நினைத்துப் பார்த்த போது, தான் சறுக்கிவிழ இருந்த கசத்தின் தன்மையையும், அதில் தான் விழாமல் காத்து ஆட்கொள்ளத் தலைவர் முயன்ற தண்ணளியையும் நினைத்து உருகினான். ஒரு தனி மாணவனான தன்னிடம் இவ்வளவு கரிசனையும், கவலையும் உடைய அத்தனிப் பெருங்கருணைவள்ளல், அத்தனை மாணவர்கள் வகையிலும் எவ்வளவு அரும்பெரும் பொறுப்பு எடுத்துக்கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கும் போது, அவர் மீது அவன் பத்தி கிட்டத்தட்ட தெய்வ பத்தியாய் வளர்ந்தோங்கிற்று.
டாமின் முதல் சறுக்கல் அவன் முதல் அரையாண்டு முடிவிலேயே தொடங்கிற்று. அப்பருவத்தின் கடைசி செவ்வாய்க்கிழமையன்று பிற்பகலில் பிள்ளைகள் ஆடிய முயல் - வேட்டைநாய் விளையாட்டின் போது அது ஏற்பட்டது. உணவு நேரத்துக்குப்பின் 'தவளைக்குஞ்சு' என்றழைக்கப்பட்ட ஹால் ஆர்வம் பெருக டாமிடம் வந்தான். ஆட்ட நேரம் கடந்து பிள்ளைகள் முயல்நாய் விளையாட்டு விளையாடுவதற்கான அவசர ஏற்பாடுகளில் கலந்துகொள்ளும்படி அழைத்தான். அது பள்ளியின் ஒழுங்குக்குப் புறம்பான ஆட்டமானாலும், டாம் ஹாலின் ஆர்வத்தினால் ஈர்க்கப்பட்டு ஒப்புக்கொண்டான். ஒளிந்தோடி ஆடும் ஆட்டமாதலால் பொழுதுசாயவே அது