பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாம் பிரௌணின் பள்ளி வாழ்க்கை

257

டாமுக்குத் தலைவர் சலுகையே மிகக் கடுந் தண்டனையாகத் தோன்றிற்று. அவன் இரவு முழுவதும் தன் தகுதியின்மையையே நினைத்து வருந்தினான்.

முயல் - நாய் வேட்டையின் போது டாம் வகையில் ஏற்பட்ட சறுக்கல் அவனை நிலைகவிழச்செய்யவில்லை. தலைவரின் அருளுள்ளம் அவன் நெஞ்சில் பெற்ற இடத்தை அது மூடாக்கிட்டு மறைக்கவும் முடியவில்லை. ஆயினும் அவன் நல்ல பையன் என்பதை எண்ணித் தலைவர் தந்த கண்டிப்புத் தளர்வு மற்ற இருவருக்கும் பேரூக்கம் தந்தது. 'தவளைக்குஞ்சு' ஹால் அடுத்த நாளே தனக்குக் கிடைத்த மன்னிப்பை ஒரு வீர காவியமாக்கிப் பள்ளியில் பரப்பினான். ஈஸ்ட் அவ்வீர காவியத்துக்கு உரை விளக்கம் தந்து பக்கப் பாட்டுப் பாடினான். தலைவர் கண்டிப்பு ஒரு வெளிப்பகட்டுத்தான் என்று அவர்கள் எல்லாரிடமும் கூறினர். டாம் அதை ஒப்புக்கொள்ளவோ ஆதரிக்கவோ செய்யாவிட்டாலும், எதிர்த்துத் தன்னுடன் ஊடாடிய தோழர்கள் ஆர்வத்தைக் கெடுக்கத் துணியவில்லை. இந்நிலையில் தொடக்கத்தில் மூத்த புரூக்கினுடைய கருத்தை நோக்கிச் சாய்ந்துவந்த அவன் போக்கு, மற்றப் பிள்ளைகளை நோக்கிப் படிப்படியாகச் சரியத் தொடங்கிற்று. மனமார அவன் அவரை வெறுக்க முடியாவிட்டாலும், செயலில், அவரை வெறுப்பவருடன் வரவர நெருக்கமாய் ஊடாடி, அவரைப் பற்றிய மதிப்பைத் தன் இன்ப ஆர்வத்திலும் களியாட்டப் பழக்க வழக்கங்களிலும் மூடலானான்.

கீழ் நான்காம் படிவத்துக்கு வந்தபின் அவன் புதிய ஆசிரியரும் பழைய ஆசிரியர்களைப் போலவே டாமைப் பற்றி நல்ல கருத்துக் கொண்டிருந்தார். புறத் தோற்றத்தில் அவனிடம் இன்னும் மாறுதல் காணப்படவில்லை. ஆனால் அத்தோற்றத்தினடியில் அவன் போக்குகள் உள்ளூரமாறியே வந்தன. ஒருநாள் நடந்த நிகழ்ச்சி ஆசிரியருக்கு இதை வெட்ட வெளிச்சமாக்கிற்று.

வகுப்பின் ஓர் ஓரத்தில் மற்ற இருக்கைகளிலிருந்து தனியாக ஓர் அகலமான இருக்கை கிடந்தது. அது மிக உயரமாய், மூன்று படிகளிட்டு ஏறிச் செல்ல வேண்டியதாயிருந்தது.நான்கு பேர்கள் அதில் தாராளமாய் உட்கார முடியும். அத்துடன் இருவர்