பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 || ||--

அப்பாத்துரையம் – 8

ஆசிரியர் கண்ணை மறைத்துப் படுத்துக்கொள்ள முடியும். ஒவ்வொரு நாளும் எந்த மாணவர் அதில் ஏறி உட்கார்வது என்பதில் ஏற்பட்ட போட்டியின் பயனாக அதில் எவரும் உட்காரக்கூடாது என்று கண்டிப்புச் செய்யப்பட்டது. ஆயினும் அதில் மறைந்திருக்க வாய்ப்பிருந்தபடியால், எப்போதும் ஒருவரிருவர் அதிலிருந்து கோலி முதலிய விளையாட்டு விளையாடுவது வழக்கமாயிருந்தது. டாமும் ஈஸ்டும் இம்மாதிரி அடிக்கடி ஆசிரியருக்குத் தெரியாமலே ஆடுவர். மற்றப் பிள்ளைகளும் ஆசிரியரைக் கவனியாமல் அதையே கவனித்த வண்ணம் இருப்பர்.

ஒருநாள் அவர்கள் ஆடிய கோலி தெறித்து வகுப்பு நடுவில் ஆசிரியர் முன்னாலேயே போய் விழுந்தது. இருவரும் கண்டுபிடிக்கப்பட்டு அடி வாங்கினர். அன்றுடன் டாமுக்கு ஆசிரியர் உலகில் இருந்த தனி மதிப்புப் போய்விட்டது. இழந்துவிட்ட அந்த மதிப்பை அந்தப் பள்ளியில் இருந்த பல ஆண்டுகளில் பெரும் பகுதிகளிலும் அவன் திரும்ப எளிதில் பெற முடியவில்லை. தன் முற்போக்குக்கு இது பெருந்தடையாயிருந்தது என்பதை டாம் சில நாட்களுக்குப் பிறகே உணர்ந்தான். அதே சமயம் மற்றவர்களளவு தீமையில் ஊறாதவனாயிருந்தும், டாமின் நற்பண்பை ஆசிரியர்கள் பயன்படுத்த முடியாது போயினர். அவன் போக்கில் ஆசிரியரும் ஆசிரியர் போக்கில் அவனும் இங்ஙனம் சூழ்நிலைகள் காரணமாக நெடுநாள் தடங்கலாயிருந்தனர்.

டாமும் ஈஸ்டும் அவர்கள் தோழர்களும், ஆசிரியர்களிடம் கெட்ட பெயர் வாங்கினாலும், அவர்களைத் தாண்டி அஞ்சாது தீமையில் முனைந்த பழம் பெருச்சாளிகள் வேறு இருந்தனர். அட்டூழியக்காரன் ஃவிளாஷ்மனே அவர்களில் முக்கியமானவன். பேட்டர் புரூக்கின் செல்வாக்கு இருந்த வரையில் அவர்கள் கை சற்றுத் தளர்வுற்றிருந்தது. அவர் பள்ளியைவிட்டுச் சென்றதே. பள்ளியின் பொதுக்கட்டுப்பாடு பள்ளி நேரத்துடன் முடிந்து விட்டது. பள்ளி இல்லத்திலும் பிற மனைகளிலும் கட்டுப்பாடு பெயரளவுக்குக்கூட இல்லை. பேட்டர் புரூக் சென்றதையடுத்து அவர் கூட்டாளிகளாயிருந்த மற்ற மாணவர்களும் ஆறாம் படிவம் கடந்து வெளிச்சென்றனர். அதன்பின் சட்டாம்பிள்ளை