அப்பாத்துரையம் – 8
260 || காரனாக இல்லை. அதே சமயம் ஒழுங்கையும் நேர்மையையும் நிலை நிறுத்துபவனாயிருந்தான். அவ்வப்போது அட்டூழியக் காரர் தொல்லையும் அவர்கள் வலியுறுத்தி வாங்கிய குற்றேவல் வேலையும் அவர்களைப் பாதித்ததானாலும், அவர்கள் அதற்கு நிலையாக ஆட்படவில்லை. ஆனால், அந்த ஆறாம்படிவ மாணவன் வெளியேறியபின் வேறு ஆறாம்படிவ மாணவன் எவனும் அவ்வறைக்கு வந்து தலைமை ஏற்கவில்லை. ஏனென்றால் திறமையற்ற அவர்கள் திறமையாக நடைபெற்ற இடத்தில் வந்து ஆட்சி
செய்யத் தயங்கினார்கள். இந்தச் சமயத்தில் அட்டூழியக்காரன் ஃவிளாஷ்மனே அங்கே வந்து தவிசேறினான். அவன் வந்ததே டாமுக்கும் ஈஸ்டுக்கும் தலையிடியாயிற்று. ஆசிரியர்களை எதிர்த்து அவர்கள் ஆதரவை இழந்துவிட்டதன் அருமைக்கேட்டை அவர்கள் அப்போதுதான் உணர்ந்தார்கள். குற்றேவல் வேலையின் ஒரு முனை முகத்தையே இதுவரை அவர்கள் அனுபவித்திருந்தார்கள். அதன் முழுக்கொடுங் கோன்மையை இப்போது நுகரலாயினர். குற்றேவேல் முறை எவ்வளவு தவறானது என்று இப்போது இருவரும் அதைக் கண்டிக்கவும் துணிந்துவிட்டனர்.
ஆனால் கண்டித்தல் எளிது, ஒழித்தல் அரிது என்பது ஈஸ்டின் தோல்வி வேதாந்தமாயிருந்தது. டாமோ அதனால் மனநிறைவடையவில்லை. அதை ஒழிப்பது எப்படி என்ற சிந்தனையிலேயே ஆழ்ந்திருந்து வந்தான்.
ல
குற்றேவலை ஒழிக்கவழி அதுசெய்ய என்ன வந்தாலும் மறுப்பதான் என்ற முடிவுக்கு வந்தான் டாம்.
L
என்ன காரணத்தினாலோ ஈஸ்டும் மறுமொழி பேசாமல் அம்முடிவை ஏற்றுக்கொண்டான். ஃவிளாஷ்மன் வந்ததுமுதல் அவன் மனம் மாறிவந்தது. பேட்டர் புரூக்கின் சொற்களைவிட அவர் போனபின் ஏற்பட்ட நிலை அவர் கொள்கையின் அருமையை நன்கு விளக்கிற்று.
இச்சமயம் ஃவிளாஷ்மன் அறையிலிருந்து குற்றேவல் கணக்கனை விளித்து 'இன்று யார் முறை!' என்று கேட்டான். டாம், ஈஸ்ட்!'
'எங்கே அவர்கள் இருவரும்?'