262
||– –
அப்பாத்துரையம் – 8
ஈஸ்ட் நடந்தது முழுவதையும் ஆர்வ வேகத்துடன் மாணவர்களிடையே கூறி அவர்கள் வீர உணர்ச்சியைத் தூண்டினான். ஆகவே போர் அவர்கள் விடுதலைப் போர் ஆகிவிட்டது.புரட்சிக்கொடி நாட்டப்பட்டது பல மாணவர்கள் அவர்களுடன் சேர்ந்து குற்றவேல் முறையை எதிர்த்து நிற்க முன் வருவதாக உறுதி பூண்டனர்.
அச்சமயம் இருக்கையுடன் இருக்கையாகப் படுத்திருந்த ஒருவன் எழுந்து, “உங்கள் முடிவு சரியானதே. ஆனால் இரண்டு செய்திகள் நினைவிருக்கட்டும். நீங்கள் அனைவரும் ஒற்றுமை யாயிருக்க வேண்டும். ஒருவர்மீது அவர்கள் தாக்கும்போது அனைவரும் சூழ்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்.இரண்டாவது நீங்கள் தாக்கக்கூடாது. அவர்கள் தாக்குதலை மட்டும் எதிர்த்து நிற்க வேண்டும். அப்போதுதான் தாக்குப்பவர்களிடையே நல்லவர்கள் விலகிப்போவார்கள், அல்லது ஒதுங்கி நிற்பார்கள். அட்டூழியத்தில் முந்தி நிற்பவர் மனங்கசந்து ஓய்வர். இது நானும் என் பழந்தோழர்களும் முன்பே பின்பற்றி வெற்றிகண்டமுறை,' என்றான்.
பேசியவன் 'டிக்ஸ்.' அவன் பெரிய பிள்ளைகளுள் ஒருவன் என்னுமளவு பள்ளியில் நீடித்த அனுபவம் உடையவன்.படிப்பில் ந்ததாலேயே மற்றத் தோழர்களுடன் அவன் மேல்வகுப்புக்குச் செல்லவில்லை.
எல்லா மாணவர்களும் அவனைச் சுற்றி நின்று, “முன்பே இத்தகைய போராட்டம் நடந்ததா? எப்போது? ஏன்?" என்று கேட்டனர். “அது பழைய தலைவர் காலத்தில் நடந்தது. அன்று போராட்டத்தில் ஒதுங்கியிருந்த கோழைகளுள் ஒருவன்தான் உங்களிடம் அட்டூழியம் நடத்தும் ஃவிளாஷ்மன். அவன் உள்ளூரக் கோழை. பிறரை ஏவிவிட்டுத்தான் அட்டூழிய ஆட்சி நடத்துகிறான். பிறரைத் தூண்ட முடியாவிட்டால், முதலில் வாலை மடக்கிக் கொள்ளுபவன் அவன்தான். பாருங்கள், இது தெரிந்தவன் என்பதனால்தான் என்கண்ணில் விழிப்பதே யில்லை” என்றான்.
மறுநாள் போராட்டம் உச்சநிலையடைந்தது. பாட நேரத்துக்குமுன் ஃவிளாஷ்மன் வழியில் காத்திருந்து டாமைக்