பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாம் பிரௌணின் பள்ளி வாழ்க்கை

263

கண்டு; “நீ குற்றேவல் செய்ய இணங்குகிறாயா, இல்லை?” என்று அதட்டிக்கேட்டான்.

டாம் ‘மாட்டேன்' என்று தலையசைத்து முன் சென்றான்.

ஃவிளாஷ்மன் உடனே அவனை எட்டி உதைத்தான். கீழே தள்ளிக் கையைப் பின்புறமாக முறுக்கினான். டாம் வலி பொறுக்காமல் உள்ளூர வதங்கினாலும் வாய்விட்டு 'ஆ' என்று கூறவில்லை; கண்கலங்கவில்லை. அத்துடன் சற்றுப் பிடி தவறியதும் அவனை மாறி உதைத்தான். அதற்குள் பாடநேரம் ஆயிற்று இருவரும் பிரிந்து சென்றனர்.

எதிர்ப்புக் கிட்டத்தட்ட வெற்றியடைந்து விட்டது. ஃவிளாஷ்மனின் தோழர்கள் அவன் தகா அடக்குமுறை கண்டு விலகினர். ஆனால் டாம், ஈஸ்ட் ஆகியவர்கள்தாம் தன் அவமதிப்புக்குக் காரணம் என்று கண்ட ஃவிளாஷ்மன் அவர்கள் மீது தனி வஞ்சம் தீர்க்கக் காத்துக்கொண்டிருந்தான்.

கொடியோர் கொடுமைக்கு ஒருபுறம் ஆளாய் அதனை எதிர்க்கும் போதுகூட, டாமும் ஈஸ்டும் பள்ளிக் கட்டுப்பாட்டை மீறி நடக்கும் பழக்கத்தை விடவில்லை. அது அவர்கள் குருதியில் ஊறிப்போயிருந்தது. அத்தகைய தறுவாய்களுக்கே ஃவிளாஷ்மன் காத்திருந்தான். ஏனென்றால் தன் செயலுக்கு அப்போது எதிர்தரப்பினரே மறைப்புச் செய்யவேண்டி வரும் என்பது அவனுக்குத் தெரியும்.

டிக்ஸுடன் பள்ளிக் கட்டுப்பாட்டுக்கு மீறிய நேரத்தில் இருவரும் தணப்படுப்பண்டையே பேசிக் கொண்டிருந்தனர். ஃவிளாஷ்மன் இருவரையும் அடையாளங் கண்டான். டிக்ஸை அடையாளம் காணவில்லை. அவர்கள் இருவரையும் தன் அறைக்குச் செல்லும்படியும், இடத்தைத் தனக்கு விடும்படியும் உத்தரவிட்டான். அவர்கள் மறுக்கவே அவன் டாம் மீது ஒரு குத்துவிட்டான்.

டிக்ஸ் விலகி நின்று 'டாம்! இந்தக் கோழைக்கு வேறு நீதி தெரியாது. ஒன்றுக்கு இரண்டு குத்துவிடு. ஆள் உன்பக்கம் மீண்டும் வரமாட்டான்,' என்றான்.

இந்தக் குரல் கேட்டதே ஃவிளாஷ்மன் பின் வாங்கினான். அதன் உண்மை ஃவிளாஷ்மனைக் கலக்கிற்று. அவன் குற்றேவல்