பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாம் பிரௌணின் பள்ளி வாழ்க்கை

273

உன்னைப் பற்றி அவர்களுக்குச் சொன்னேன். அந்தச் சிறுவனுடன் நீயும் இருக்கலாம் என்று கூறினார்கள். இந்த ஏற்பாடு உனக்குப் பிடிக்கும் என்று கருதுகிறேன்.'

டாம் முகம் விழுந்தது. கிரேயின் அறையை அவன் ஆவலோடு எதிர்பார்த்தது உண்மையே ஆனால் அவன் ஈஸ்டின் தோழமையைவிட்டு அதைப் பெறவேண்டும் என்று அவாவிய வனல்லன். ஆகவே, தான் விரும்பிய அறையைப் பெற்ற மகிழ்ச்சி கூட இந்த ஏமாற்றத்தை முழுவதும் மறைக்க முடியவில்லை.

இல்லத் தலைவர் அவன் எண்ணக் குறிப்புகளை அறிந்தார். ஆனால், அவர் உள்ளப் பாங்குகளையும் குறிப்பாகத் தெரிந்து கொண்டார். ஆகவே அவர் அவன் இரக்க உணர்வைக் தூண்டினார்.

“அந்தோ பாவம்! அவனுக்குத் தந்தை இறந்து போனார். உடன்பிறந்த துணைவர் யாரும் இல்லை. தங்கை ஒரு குழந்தை நோயினால் நலிந்து பிழைக்க முடியாத நிலையிலிருக்கிறது. இத்துன்பத்தின் தொடர்பிலிருந்து விலக்கவே அவனை விரைந்து பள்ளிக்கு அனுப்ப வேண்டியதாயிற்று.”

“அவன் தாய் அவ்வளவு நல்லவள். இளகிய மனதுடையவள். அவனைத் திருமதி ஆர்னால்டிடம் விட்டு டம் விட்டு, அவனைப் பாதுகாக்கும்படி ஆயிரந்தடவை பன்னிப் பன்னிக் கேட்டாள். அதன் பின்னும் மூன்று மணி நேரம் விடாது அவளைக் கட்டி அழுது கொண்டே வீட்டுக்குச் சென்றாள். திருமதி ஆர்னால்டு அவளுக்குத் தக்க ஆறுதல் கூறினாள். அண்ணனுக்கு அண்ணனாக இருந்து அவனைப் பாதுகாக்கத் தக்க நலம் மாணவனுடன் அவனைச் சேர்த்து வைப்பதாக வாக்களித்தார்கள்” என்றார் தலைவர்.

இன்னும் நேரிற் காணாத, பெயர் தெரியாத சிறுவனிடம் இன்ன தென்றரியாத இரக்கம் ஒரு புறமும், தன்னிடமும் திருமதி ஆர்னால்டு வைத்திருந்த தனி நம்பிக்கை ஒருபுறமும் இவ்வேற்பாட்டில் டாம் மனநிறைவுறச் செய்தன. அவன் தனக்குள், "சரி, வேண்டா வெறுப்பாகவாவது நான் ஈஸ்டின் நெருங்கிய தோழமையை இழக்க வேண்டியதுதான்! என்ன செய்வது? என்று எண்ணி உடன்பட்டான்'

>>