பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274)

||--

அப்பாத்துரையம் – 8

தன் புதிய பொறுப்பின் தன்மை எப்படி இருக்குமோ என்று எண்ணிக்கொண்டேடாம் சிறுவன் இருந்த அறைக்கு சென்றான். அறையில் வேறு யாரும் இருப்பதாகவே காணவில்லை. ஊன்றிப் பார்த்தபின் ஒரு சாய்விருக்கையில் ஓர் ஓரத்தில் தலையணையுடன் தலையணைபோல ஒரு மெல்லிய விளரிய உருவம் கிடந்தது. அவன் கண்கள்மட்டும் நீலநிறமாக இருந்தன. தலைமயிர் பொன் நிறமாயிருந்தது. அந்தோ! அவனைப் பார்க்க, அவன் ஒரு தாயினாலோ, ஒரு செவிலியினாலோ கவனிக்கப்படத் தக்கவனாயிருந்தானேயல்லாமல், டாம்போல ஓடியாடித் திரியும் ஒரு கிளர்ச்சிகரமான இளைஞனாகத் தோன்றவில்லை.

இரவு நேரம் ரக்பி நகரெல்லாம் சுற்றித் திரிய வேண்டும், படகு செய்து ஆற்றில் மீன் பிடிக்க வேண்டும், முயல் நாய் ஆட்டம் ஆடவேண்டும் என்றிவ்வாறாக எத்தனையோ திட்டங்கள் வருகிற ஆண்டுக்கு டாம் தீட்டியிருந்தான். 'ஈஸ்டினிடமாக இந்தச் சிறுவனை ஏற்றால் அவை என்னாவது? சிறுவனுடைய பொறுப்பைச் சரிவரப் பாராமல் தட்டிக்கழித்துவிட்டு அவற்றை முன்போல நாடுவதா? சே! டாம் போன்றவர்களாலே எளிதில் சமாளித்துக் கொள்ள முடியாத அளவு பொல்லாப் பிள்ளைகள் சூழ்ந்த ரக்பியில், இந்த ஏலமாட்டா இளந்தளிரை ஆதர வில்லாமல் விடுவது கொலை செய்வதற்கல்லவா ஒப்பாகும்? கூடாது, கூடாது. திட்டங்களெல்லாம் காற்றோடு பறக்கட்டும். இப்பொறுப்பை எப்பாடுபட்டாயினும் நிறைவேற்றியே தீரவேண்டும்,' என்று டாம் முடிவுகட்டினான்.

மெல்லச் சிறுவனிடம் சென்று 'வா, தம்பி. நான் தான் உன் அறைத் தோழன். உன் பெயரென்ன? சாப்பாடு நேரமாயிற்றே, போகவேண்டாமா?' என்று கேட்டான்.

சிறுவனுக்குப் பேசவே திடமில்லை. குழந்தை போல் மருளமருள விழித்தான். அதற்குள் இல்லத் தலைவர் வந்தார். “அவன் பெயர் ஆர்தர், ஜார்ஜ் ஆர்தர். அவன் புத்தகங்களையும் பிற தட்டுமுட்டுப் பொருள்களையும் நான் உங்கள் அறையில் கொண்டு வைத்துவிட்டேன். போகுமுன்பே அவனுடைய தாயார்அறை முழுவதிலும் சுவர், இருக்கைகள் எல்லாவற்றையும் புதுப்பித்து, புதிய சுவர்த்தாளும் புதிய உறைகளுமிட்டுச் சென்றிருக்கிறாள். பலகணிகளுக்கும் வாயிலுக்கும் தானே