டாம் பிரௌணின் பள்ளி வாழ்க்கை
முயன்று புதிய பச்சைப் பட்டுத் திரைகள் இ செய்திருக்கிறாள்,” என்றார்.
275
டு அணி
எவ்வளவு
டாம் புதிய சிறுவனாதலால் தனக்கு பெருமையும் உயர்வும் ஏற்பட்டுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும் என்பதற்காகவே தலைவர் தாயாரின் இம் முயற்சிகளைத் தனிப்பட எடுத்துரைத்தார்.டாமின் முகத்தில் அதன் நல்விளைவைக் கவனித்தபின் அவர் புதிதாக மற்றொரு துருப்பையும் பயன்படுத்தினார்.
'டாம், இன்று நீ பள்ளி இல்லத்தில் தேநீர் அருந்தச் செல்ல வேண்டியதில்லை' என்றார் அவர்.
டாம் ஒன்றும் புரியாமல் 'ஏன்?' என்றான்.
"ஆர்தருடன் நீயும் இன்று தம்முடன் வந்து தேநீர் அருந்தும்படி திருமதி ஆர்னால்டு செய்தி சொல்லியனுப்பி யிருக்கிறார்' என்றார் இல்லத் தலைவர்.
ஆறாம்படிவத்துப் பிள்ளைகளில்கூட மிகச் சிலருக்கே மிகச் சில தறுவாய்களிலேயே இந்த உரிமை தரப்படும். அது இப்போது தனக்குத் தரப்பட்டது கண்டு டாம் இறும்பூது எய்தினான். தனக்குத் தரப்பட்ட இம்மதிப்பைத் தான் இனிக் காக்க வேண்டும் என்ற கருத்து அவனுக்கு ஏற்பட்டது.
திருமதி ஆர்னால்டு அவனையும் ஆர்தரையும் அன்பு கனிந்த முகத்துடன் வரவேற்றார். அறிஞர் ஆர்னால்டுடாமைத் தட்டிக் கொடுத்தார். மாணவர் உலகின் போராட்டங்களாகப் பொறுக்கி எடுத்த ஒன்றிரண்ட ஆறாம் படிவ மாணவரும் ஒன்றிரண்டு ஆசிரியரும் ளைய புரூக்கும் அப்போது அவர்களுடன் இருந்தனர். டாமின் ஆன்மீகச் சூழல் இதனால் வானளாவ உயர்த்தப்பட்டது. தான் முந்திய பள்ளி வாழ்வில் அறிஞரை எவ்வளவோ புண்படுத்தி நடந்தும், அவர் தன்னை இன்று தம் குடும்பத்தில் ஒருவனாக நடத்தியது கண்டு அவன் எல்லையில்லா நன்றியுணர்வும் பெருமித உவகையும் உடையவனானான்.
இப்போது பதினெட்டு வயது அடைந்துவிட்ட இளைய புரூக் ஆறடி உயரமுடையவனாய், ஆசிரியருள் ஓர் ஆசிரியராகத்