டாம் பிரௌணின் பள்ளி வாழ்க்கை
277
கால்டிகாட் ஸ்பின்னி' ஆகிய இடங்களுக்கு இட்டுச்சென்று வரலாம். நாட்டுப்புறக் காட்சிகளை உன்னுடன் அவன் கண்டுகளிக்கப் பழகினால், அவன் உடலும் தேறிவிடும். இவற்றால் உனக்கும் மகிழ்ச்சி ஏற்படும் என்றே நினைக்கிறேன்,” என்றார் ஆர்னால்டு.
ஓய்வு நாட்களைக் கழித்த வகைகள், வருகிற அரையாண்டு நிகழ்ச்சித் திட்டங்கள், வருகிற பாலியோல் புலமைப் பரிசுவகையில் ரக்பிக்கு ஏற்படக்கூடும் வாய்ப்பு நற்பேறுகள், வருகிற ஆண்டுக்குரிய மரப்பந்து ஆட்டத் தேர்வுக் குழுவினர் பட்டி ஆகியவை பற்றி அருந்து மேடையில் ஆர்னால்டும் பிறரும் பேசிக்கொண்டிருந்தனர்.
இங்ஙனமாக, டாமிடம் ஆர்னால்டு புறத் தீமையினைக் கடந்து அகநலம் கண்டு அதை வளர்க்க விரும்பித் திட்ட மிட்டிருந்தார். அதன் பயனாக, டாம் திடீரென்று தன் வயதுக்கும் வகுப்புக்கும் மேற்பட்ட உயர்மதிப்பும் பெரும் பொறுப்பும் தரப்பட்டான்.
அடிக்குறிப்புக்கள்
1. Bilton Grange, Cald Cott spinney ரக்பியிருகிலுள்ள இடங்களின் பெயர்கள்.