பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாம் பிரௌணின் பள்ளி வாழ்க்கை

“ஏன்,

உன்னிடமாவது பேசக்கூடாதா?"

இரங்கத்தக்க குரலில் கேட்டான் ஆர்தர்.

281

என்று

டாம் புன்முறுவல் பூத்தான். “நான்தான் உனக்கு அண்ணன் ஆயிற்றே. என்னிடம் பேசலாம். ஆனால், என்னிடமும் பிறர் முன்னிலையிலோ பொது இடங்களிலோ அப்படிப் பேசக் கூடாது. அது மதிப்புக்குறைவு. சிறுபிள்ளைத்தனம்! நீ இப்போது பெரியதொரு பள்ளியில் சேர்ந்திருக்கிறாய். இனி, சிறு பிள்ளையன்று!” என்றான்.

ஆர்தர் இத்தகைய பேச்சில் சோர்வுறுமுன் டாம் பேச்சை அவன் புத்தகங்களில் திருப்பினான். "உன் புத்தகங்கள் எவ்வளவு அழகாய் இருக்கின்றன! இது பள்ளிப் புத்தகங்கள் தாமா?” என்று கேட்டான்.

ஆர்தருக்குப் பள்ளிப் பழக்கமும் உடல் நலமும் உள் வலிமையுந்தான் இல்லாதிருந்தது. புத்தகப் படிப்பில் அவன் மிஞ்சியவனாகவே இருந்தான். புத்தகங்களுக்கு அட்டையிடல், படம் வரைதல், பாடுதல் ஆகியவற்றில் அவன் கலைப் பண்புடைய வனாகவே இருந்தான் குணத்திலும், அன்புடைமை, பொறுமை, தன்னடக்கம் இவைகள் அவனிடம் குடிகொண்டிருந்தன. துணிவு, அஞ்சாமை, செயல் விரைவு ஆகியவையே அவனிடம் குறைபட்டன. மொத்தத்தில் தன்னிடம் போதிய அளவு வளராத பல நற்பண்புகள் அவனிடம் இருந்தன என்று டாம் எளிதில் கண்டான். இவ்விருமை உணர்வு காரணமாக ஆர்தரி அவனுக்கு ஒருபால் அன்பும் இரக்கமும், மற்றொருபால் மதிப்பும் ஆர்வமும் எழுந்தன.

ம்

ஆர்தருக்கு டாமும், டாமுக்கு ஆர்தரும் வரவரப் பிடித்துப் போயினர். தன் தங்கு தடையற்ற போக்குக்கு ஆர்தரின் பாதுகாப்புத் தடையாயிருக்கக் கூடும் என்று டாம் தொடக்கத்தில் கருதிய கருத்தின் நிழல் வரவர மறைந்து வந்தது. அவன் இனிய குழந்தை மனம் வீறமைதியுடை இளைஞன் உள்ளமாக வளர்ச்சியில் அவன் மகிழ்ச்சியும் எழுச்சியும் கண்டான்.

ஆர்தருக்கு டாம் கற்றக்கொடுத்த செய்திகள் பல.ஆனால், அவனிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பண்புகளும் பல இருந்தன என்று டாம் உணர்ந்தான்.