பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282

||- -

அப்பாத்துரையம் - 8

புதிய அரையாண்டின் தொழுகை பழைய அரையாண்டின் தொழுகையைப் பலவகையில் டாமுக்கு நினைவூட்டின. ஆயினும் அவன் குறிப்பிடத்தக்க வேற்றுமைகளைக் காணாமலில்லை. முதல்முதல் வந்த போது ஒழுங்குகாத்த மூத்த பையன்கள் அடுத்த தடவை இல்லாததால் ஒழுங்கு குறைந்திருந்ததை அவன் இதற்குமுன் கவனித்ததில்லை. ஏனென்றால் அப்போது அவனே ‘ஒழுங்கு’ என்பதைத் தன் துடிதுடிப்புப் பருவத்தில் மறந்திருந்தான்.ஆனால் இப்போது அவன் சற்று மாறிவிட்டபின் அவன் கண்கள் தம்மையே நம்பமுடியவில்லை.

இடைக் காலத்தில் இருந்த அமளிக்குக் காரணமான தலைவர்களிலும் சிலர் போய்விட்டனர். மீந்தவர்களும் தம்மையறியாமல் குறைந்த அமளியுடையவராய் இருந்தனர். பள்ளியில் திருந்தியதுதான் மட்டுமல்ல; தன் பழைய தோழர்கள் தன் புதுப்போக்கைக் கண்டு ஏளனம் செய்துவந்தாலும், தாமும் தம்மை அறிந்தோ, அறியாமலோ மாறிக்கொண்டு தானிருந்தனர் என்பதை அவன் காண முடிந்தது.

தொழுகை நேரத்தில் ஆர்தர் தன்னை மறந்திருந்ததை டாம் கண்டான். அவன் உள்ளம் ஆர்தர் அமைதி கண்டு வியப்படைந்தது.

படுக்கையறையில் ஆர்தர் பழக்கவழக்க மரபுகள் அவனை இன்னும் வியப்படையச் செய்தன. முன்பின் பழக்கமில்லாத புதுப் பிள்ளைகளுடன் பலருடன் ஓரறையில் படுக்கை போட்டிருப்பதைக் கண்டு ஆர்தர் முதலில் விழித்து நின்றான், சிறு பிள்ளைகள் யாதோர் அட்டியுமின்றி, வந்தவுடன் பகலுடை மாறிப் படுக்கச் செல்வதையும், டாமும் பிற பெரிய பிள்ளைகளும் ஒருவர் படுக்கையில் ஒருவரிருவராக உட்கார்ந்து அரட்டையடிப் பதையும் கண்டு, அவனும் தன் படுக்கை என்று எண்ணால் குறிக்கப்பட்ட ஒன்றின் அருகே சென்று நின்றான்.

சிறிது நேரம் அவன் நின்று டாமையே பார்த்துக் கொண்டிருந்தான், அச்சமயம் டாம் பிறருடன் பேசுவதில் ஈடுபட்டிருந்தான். சிறிது நேரம் நின்று பார்த்துப் பின் அவன் டாமிடம், “நான் கால் முகங்கழுவிக் கொள்ள விரும்புகிறேன். கழுவிக் கொள்ளலாமல்லவா?" என்று கேட்டான்.