(284
அப்பாத்துரையம் – 8
66
“அடேபிரௌன்! என்ன திமிரடா உனக்கு! இதை ஏன் வீசி எறிந்தாய்?” என்று அவன் அலறினான்.
டாம் இறுமாப்புடன் ஓர் அடி முன் எடுத்து வைத்து “எதற்கு என்பதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. தேவைப்பட்டால் அடுத்த காலணியும் இருக்கிறது. அதற்குத் துணையாக,” என்று முழங்கினான். அவன் நாடி நரம்புகளும் தசைப்பற்றுக்களும் சினத்தால் துடித்துக் கொண்டிருந்தன.
நிலைமை அந்நேரமே நெருக்கடியாயிருக்கும். ஆனால் அதற்குள் தலைமைப் பொறுப்புவகிக்கும் ஆறாம்படிவ மாணவன் வந்துவிட்டதால், புற அமைதி ஏற்பட்டது.
ஆர்தருக்கு டாம் கற்றக் கொடுத்த செய்திகள் பல. ஆனால், அவனிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பண்புகளும் பல ருந்தன என்று டாம் உணர்ந்தான்.
மாணவர் சமூகத்தில் ஆட்டங்களுக்கும், அடிபிடி சண்டைகளுக்கும், வீம்புப் போட்டிகளுக்கும் இருந்த மதிப்பு, புத்தகப் படிப்புக்கும் வழிபாட்டுக்கும் கிடையாது. அவற்றை ன்றியமையாக் கட்டுப்பாடுகளாக மட்டுமே கருதினர்.புத்தகப் படிப்பில் ஆர்வங்காட்டுதல் கோழைகளின் செயல் என்றும், வழிபாட்டில் இறங்குபவர்கள் பசப்பார்கள், எத்தர்களாக ருந்து, மாணவ சமூகத்தைக் கேலி செய்பவர்கள் என்றும் பொதுவாகக் கருதப்பட்டது. இவற்றில் ஈடுபடுவதற்குப் போதிய உள்ளார்வம் பொதுவாக மிகச் சில மாணவர்க்கே இருந்தது.
டாம் தொடக்கத்தில் இவற்றில் ஆர்வமுடையவனாகவே இருந்தான். ஆனால், அதை வெளிப்படையாகக் காட்ட அவன் விரும்பவில்லை. பிள்ளைகள் எதிர்ப்புக்கும் ஏளனத்திற்கும் அவன் அஞ்சினான். அத்துடன் அச்செயல் மூலம் மாணவர் சார்பான பள்ளியின் கட்டுப்பாட்டை மீறுவது தவறு என்றும் நாளடைவில் அவன் சமூகமனச் சான்று கூறியது அவன் ஆர்வமும் நாளடைவில் மங்கி மழுங்கிற்று. இப்போது ஆர்தரின் செயல் அவன் பழைய உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பிற்று. தன் தாய் தன்னிடம் பன்னிப்பன்னி வழிபாட்டை வலியுறுத்தியதும், தான் எதுவந்தாலும் காலை மாலையில் துயிலெழும்போதும் உறங்கப் போகும்போதும் வழிபாடு செய்வதென்று அவரிடம் உறுதி