பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாம் பிரௌணின் பள்ளி வாழ்க்கை

வானின் ஒளிஅவன் உள்ளம் பரந்தது, வண்ணப் பறவையின் பாட்டங் கொலித்தது; தேனின் சுவைமணம் தேங்கிய மலர்கள்

தீங்குரல் வண்டினம் முரல்வன எங்கும்!

287

டாமின் உள்ளத்தின் மேற்பரப்பில் முட்செடிகள் போல அடர்ந்திருந்த குறும்பார்வம், வீம்புப் போட்டி, கட்டற்ற போக்குகள் ஆகியயாவும் அகன்றதன்பின், நிலத்தின் உள்ளார்ந்த வளநலம்போல அவன் இயற்கை உளநலம் மெல்ல மெல்லச் செயலாற்றத் தொடங்கிற்று. மற்றவரை நையாண்டி செய்து புண்படுத்துவதில் அவன் கண்ட ஆர்வத்தை இப்போது எவரும் ஆர்தரை நையாண்டி செய்யாமல் பார்க்கும் கவலை வென்றது.

ஈஸ்ட் கேலியாகப் பல தடவை டாமைப் பற்றிக் கூறியது இப்போது உண்மையாயிற்று. ஒரே முட்டையிட்டு அதனைக் காக்கும் தாய்க்கோழி போல அவன் ஆர்தரைக் காக்க முற்பட்டான். ஆர்தரைத் தனியாகவிட நேர்ந்தபோதுங்கூட, அவன் உள்ளம் ஆர்தரிடமே உலவிற்று. ஆர்தர் பள்ளி வகுப்பு வேறாதலால், பள்ளிவரை மட்டுமே டாம் அவனை இட்டுச் சென்றான். ஆனால், பள்ளி விடும் நேரத்துக்குச் சற்றுமுன்பே அவன் ஆர்தருக்காக வாயிலில் வந்து காத்து நின்றான்.

டாம் ஒவ்வொரு நாளும் இரவில் தொழுகைக்கு முன் ஆர்தரின் நாள் முறை வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளை முற்றிலும் கேட்டுணர்ந்து, அவ்வப்போது தக்க அறிவுரைகள்,எச்சரிக்கைகள், ஆதரவுரைகள் தருவான். உணவு மேடையில் அவன் தட்டத்தில் வேறு எந்தக் குறும்பனும் கையிட்டு அவன் உணவைத் திருடிவிடக்கூடாதே என்று விழிப்பாயிருப்பான்.விளையாட்டுக் களத்தில் அவனை எவரும் நேர்மையின்றித் தாக்கக் கூடாதே என்று அவன் மீது ஒரு கண்ணாக இருப்பான்.

அவன் வேலை கடுமையாயிருந்தது. ஆனால் தாய் வீட்டில் வேலை செய்யத் தயங்கிய சிறுமி தான் தாயானபின் தயங்காது உழைப்பதுபோல அவன் உழைத்தான். தந்தையை எதிர்த்துக் குறும்பு பேசிய தனயன் தந்தயானபின் தன் பிள்ளையின் குறும்புப் பேச்சைக் கேட்டு கேட்டு உள்ளூர உள்ளூர நகைப்பதுபோல, அவன்