290
|– –
அப்பாத்துரையம் - 8
புத்தகம், சமயம் ஆகியவற்றில் டாம் ஆர்தரால் பயன்பெற்றது போலவே, ஒரொரு சமயம் டாமினால் ஆர்தரும் விளையாட்டு, உடற்பயிற்சி ஆகியவற்றில் கலந்தும் பிற பிள்ளைகளுடன் அச்சந்தவிர்த்துப் பழகியும் அரும்பயன் பெற்றான். அவன் உடல் முற்றிலும் நலமடைந்தது. உள்ளம் முற்றிலும் உரம் பெற்றது. அவன் உடலின் இயற்கையான நொய்மை முற்றிலும் மாறவில்லையானாலும், அவன் ஆட்டக்களங்களிலும் டாமின் உச்சநிலைப் புகழை எட்ட முடியவில்லையானாலும், பிற பிள்ளைகளால் செய்யப்படும் நிலையிலிருந்து நெடுந்தொலை முன்னேறி விட்டான்.
ஏளனம்
ஊர்
ஆர்தரின் வாழ்க்கையைப் பற்றிய பல செய்திகள் இப்போது டாமுக்குத் தெரிந்தன. அவன் தந்தை ஓர் மதகுருவாயிருந்தவர். அவரும் ஆர்தர் தாயும் ஊரில் செல்வர் முதல் ஏழைவரை எல்லாருக்கும் நல்லவர்களாயிருந்தனர். ஏழைகளுக்கு அவர்கள் காட்டிய பரிவும், அவர்கள் நலம்பெற அவர்கள் ஆற்றிய தொண்டும் அவர்களை மக்களின் கண்கண்ட தெய்வங்களாக்கி யிருந்தன. பெண்களுக்கு எந்தத் துயர் வந்தாலும் ஆர்தரின் தாயிடம் அவர்கள் வந்து ஆறுதலும் தேறுதலும் அடைந்ததுதடன் அடிக்கடி பல உதவிகளும் ஆதரவுகளும் பெற்றனர்.
ஆர்தரின் உடன்பிறந்தவர் இருவரும் பெண்கள், மூத்தவள் ஆர்தரின் அக்காள். இளையவள் அவன் தங்கை. மூவரிலும் ஆர்தரே நோய்ப்பட்ட உடலுடையவன். மிகச் சிறு வயதிலேயே எலும்புருக்கி நோயுற்று நலிந்ததால் அவன் எளிதில் உடல்நலம் பெறவில்லை. அவன் உயிர் நிலைக்குமோ என்றுகூடப் பெற்றோர் பெருங்கவலையுற்றனர்.
அவனது
பன்னிரண்டாவது வயதில் இன்னொரு பெருந்தீங்கு குடும்பத்துக்கு ஏற்பட்டது. திடுமென ஆர்தர் தந்தையை அவர்கள் இழக்க நேர்ந்தது. ஊரில் பரந்து மக்கள் உயிரைச் சூறையாடிய ஒரு காய்ச்சலே இதற்குக் காரணம்.
ஏழைகள் பலர் இறந்துபட்டனர். செல்வர் தாம் பிழைக்கவேண்டுமென்னும் ஆர்வத்தால் ஒவ்வொருவராக