பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. மற்போராட்டம்

திருநூலின் பழைய ஏற்பாட்டில் ஆர்தர் காட்டிய பற்று, பழைய ஏற்பாட்டுடன் நிற்கவில்லை. கவிதையிலும் இலக்கியத்திலும் அவனுக்கு எல்லையற்ற சுவை இருந்தது. ஆர்தர் வந்த அரையாண்டுக்கு அடுத்த அரையாண்டில் ஆர்தர், டாம், ஈஸ்ட் ஆகிய மூவருமே நான்காம் படிவத்துக்கும் ஐந்தாம் படிவத்துக்கும் இடையிலுள்ள நடு வகுப்பில் பயின்று கொண்டிருந்தனர். கிரேக்க இலக்கியப் பாடம் தொடங்கும் வகுப்பு இதுவே. அதன் முழு முதல் காவியமான ஹோமரின் இலியடில் நாற்பது நாற்பது அடிகள் ஒரு பாட மாக வகுக்கப்பட்டிருந்தது. ஆசிரியர்கள் வகுப்பை விரைவுபடுத்தும் ஆர்வத்தில் சிலசமயம் அந்த அளவு தாண்ட முனைவதுண்டு.

டக்களத்தின் பல மரபுகளைக் காக்க முடியாது போனபின், அதிலுள்ள குடியாட்சிப் பண்பு இப்போது பாடங்கள் மீதும் படையெடுக்கத் தொடங்கிற்று. நாற்பது வரிகளையே விரும்பாமலும் கவனியாமலும் இருந்த பலர், அது கடந்த ஒவ்வோர் எழுத்தையும் எதிர்ப்பதே குடியாட்சியுரிமை என்று கொண்டனர். ஆசிரியரை எதிர்த்த இக்குழுவுக்குத் தலைமை வகித்தவன் வில்லியம்ஸ் என்பவன். அவன் ஒரே ஒரு தகுதியினால்தான் தலைமைக்கு வந்தவன். அவன் எதிரிகளை அடிக்கும் அடி சம்மட்டியடி போலிருந்தது. அவனை யாவரும் சம்மட்டி வில்லியம்ஸ் என்று அழைத்தனர்.

நீண்ட கிரேக்க மொழித் தொடர்களும் அவற்றிலும் சுற்றி வளைந்து நீண்ட தாய்மொழி விளக்கங்களும் மிகப் பெரும்பாலாருக்கு உண்மையிலேயே கடுமையாயிருந்தன. மூன்றாம் பாடம் நடைபெற வேண்டிய சமயம் ஆசிரியர் கிரகாம் நோய்வாய்ப்பட்டிருந்தார். புதிய ஆசிரியர் ஒருவர் தற்காலிகமாப் படம் எடுக்க வருவதாயிருந்தார். இச்சமயம் வில்லியம்ஸ் தன்