பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாம் பிரௌணின் பள்ளி வாழ்க்கை

293

சார்பில் பிள்ளைகளைத் திரட்டினான் எல்லோரும் சேர்ந்து படியாமலிருந்தால் பாடம் மரபெல்லையாகிய நாற்பது அடிகளைத் தாண்டாததுடன், சில சமயம் குறையவும் வழி ஏற்படலாம் என்று அவன் எண்ணினான். ஆகவே அவன் “பழைய ஆசிரியர்களுக்குத்தான் நாற்பது வரி என்ற கட்டுப்பாடு. புதிய ஆசிரியரிடம் அது நம் உச்ச அளவு எல்லை மட்டுமே என்று கூறிவிடலாம். முதல் நாளில் நாம் முன்னேறாதது கண்டு அவரே மெள்ளச் செல்ல இணங்குவார். ஆகவே இவ்வாரப் பாடத்தை யாரும் வருந்திக் கற்க வேண்டியதில்லை,” என்று கூறி வைத்தான்.

பிள்ளைகள் எல்லாரும் இதை ஆதரித்தனர். ஈஸ்டும் டாமும் கூட அவர்கள் பக்கம் சாய்ந்தனர். ஆர்தர் அவர்களை எதிர்க்கத் துணியவில்லை. ஆதரிப்பவன்போல வாளா இருந்தான். படிக்கும் நேரத்தில் அனைவரும் பேசி வைத்தால் போல ஒவ்வொருவராக நழுவி வெளிச்சென்றுவிட்டனர். ஆயினும் ஆர்தர் வெளியே வரவில்லை. நேரப்போக்கு வாசிப்பாகவே அவன் அன்றைய பாடம் முழுவதும் மட்டுமின்றி அடுத்தநாள் பாடமும் வாசித்து மகிழ்ந்திருந்தான்.

ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாகப் புதிய ஆசிரியர் தாமே பாடத்தில் ஆர்வமிக்கவராயிருந்தார். அவர் முறைகள் புதியவனாயிருந்தன. அவர் தாமே கவிதை யார்வத்தில் ஆழ்ந்து கவிஞனின் உணர்ச்சி நயம், சொல் நயங்களை விளக்கிக்காட்டி மாணவருக்கு ஊக்கம் தருபவராயிருந்தார். மூலகிரேக்க தொடர்களுக்குப் புத்தகத்திலுள்ள மரக்கட்டை மொழி பெயர்ப்புகளை விலக்கி, உயிருள்ள தாய்மொழிச் சொற்களால் அவர்களுக்கு உணர்ச்சியூட்டினார். இம்முறையில் மரபெல்லைப் படிப்பான நாற்பது அடிகளும் முக்கால்மணி நேரத்தில் முடிந்துவிட்டன.

இன்னும் கால்மணி நேரம் இருந்தது. பிள்ளைகள் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்தனர். ஆயினும் எவரும் பாடம் ஒப்புவிக்கப்போவதில்லை என்பதை அறிந்து வில்லியம்ஸ் எதிர்ப்பு முன்னணி திறக்கக் காத்திருந்தான்.

ஐந்து கணநேரம் பாடங்களை மாணவர் ஒப்புவித்தபின் மேற்செல்வதென்று ஆசிரியர் ஆர்வமுடையவராயிருந்தார். ஆனால் மாணவர் ஒவ்வொருவராக எழுந்து நின்றனர். பாடம்