பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாத்துரையம் - 8

298 ||- மற்போர் என்றால் பிள்ளைகளுக்கு எப்போதுமே கிளர்ச்சி. ஆகவே தமக்கு அக்காட்சி வாய்த்தது கண்டு அவர்கள் கிளர்ச்சி பெற்று, ‘மற்போராடா மற்போர்! விலகி நில்லுங்கள்' என்று ஆரவாரித்தனர்.

இச்செய்தி காட்டுத் தீப்போல் ரக்பி உலகெங்கும் பரந்தது. எல்லா இல்லங்களிலிருந்தும் பிள்ளைகள் வந்து திரண்டு குழுமினர். டாம் ஒரு சிறுவனை அழைத்து, ஈஸ்டிடம் சென்று செய்தி கூறி என் சார்பில் பக்கத் துணைவனாயிருக்கும்படி கூட்டிவா, என்றான். சிறுவன் காற்றாடியாகப் பறந்தான்.

வில்லியம்ஸுக்குத் துணைவனாக மார்ட்டின் என்பவன் வரவழைக்கப்பட்டான்.

ஈஸ்டும் மார்ட்டினும் மற்போர்த் துணைவருக்கு வேண்டிய பஞ்சு முதலிய துணைக்கருவிகளுடன் விரைந்து முற்றவெளிக்கு ஓடிவந்தனர்.

தன் வாழ்வின் தலைசிறந்த பணி இதுதான் என்ற உயர் கிளர்ச்சியுடன் டாம் தன் மேற்சட்டை, அரைச் சட்டை, காற்சட்டை, காலணிகளைக் கழற்றுகிறான். வில்லியம்ஸ் அவற்றைச் சீற்றத்துடன் வீசி எறிகிறான்.

இருவரையும் காண்பவர் எவருக்கும் அது சரி சமப் போட்டி என்று தோற்றாது. வில்லியம்ஸ் அதே வகுப்பில் இருந்தவ னானாலும் படிப்பில் மடியனாதலால், பல ஆண்டுகள் ஒவ்வொரு வகுப்பிலும் இருந்தவன். டாமின்முன் அவன் ஒரு சிறிய யானைக்குட்டியாகக் காட்சியளித்தான்.டாமின் இடத்தில் ஆர்தர் இருந்தபோது வேற்றுமை இதனினும் முனைப்பா யிருந்தது என்று கூறவேண்டுவதில்லை. ரக்பியின் ஒழுங்குமுறை இன்னும் இத்தகைய செய்திகளின் சரிசம நேர்மைக்

கட்டுப்பாட்டைக் கொண்டுவரவில்லை.

ஈஸ்ட் டாமின் அரையில் கச்சை கட்டினான். பின்கை மடிப்பைச் சுருட்டி மடக்கிக்கொண்டே, "டாம், சண்டை செய்யும்போது நீ எதையும் வாயைத் திறக்கவேண்டாம். நாங்கள் எல்லாம் கவனித்து உன்னை ஊக்குகிறோம். நீ உன் வலிமையைக் குரலில் செலவிடாதே,” என்றான். மார்ட்டினும் வில்லியம்ஸைச்