அறிவுலக மேதை பெர்னாட்சா 11 புகழ்ந்தவர்.ஆனால், டால்ஸ்டாயையும் காந்தியடிகளையும் போல, அவர் உயிர் அறுவை முறையைக் கண்டித்தார். சமயத்தைப் பிழைப்புத் தொழிலாகக்கொண்ட குருமாரை அவர் கண்டித்தது போலவே, மருத்துவத்தைத் தொண்டூழியம் எனக் கருதாது, பிழைப்பூதிய நெறியாகக் கொண்டவரையும் அவர் தாக்க முற்பட்டார். நல்ல கோயில்களைவிட, நல்ல நாடக மேடைகள் தூய்மையான ஒழுக்கத்திற்கு உதவத்தக்கவை என்று அவர் கூறினார். ஆனால் ஷேக்ஸ்பியரின் நாடகங்களில்கூடத் தாம் கருதிய கலை ஒழுக்கமுறையின் அடிப்படை இல்லை என்று அவர் ஓயாது தாக்கினார்.
மற்ற எல்லாத் துறைகளிலும் ஷா கொண்டுவர எண்ணிய சீர்திருத்தங்களைவிட, கலையில் அவர் கொண்டுவர நினைத்த சீர்திருத்தமே புதுமைவாய்ந்தது.கலை என்பது மக்கள் வாழ்க்கைப் பண்பை உள்ளவாறு, ஆனால் மனங்கொள்ளும் வகையிலும், பயன் நல்கும் வகையிலும் தீட்டி, அதன் நல்ல பண்புகளையும் தீய பண்புகளையும் விளக்க வேண்டும். கலைஞர்களுள் பெரும் பாலார் ஆண்பெண் பாலார் தொடர்பு ஒன்றே வாழ்க்கை எனக் கொண்டு, உடலழகை அடிப்படைப் பண்பாக்கி, சிற்றின்ப மயக்கத்தையே கலைப்பொருளாக்கினர். ஆனால், இதனை வாழ்க்கையின் பொழுதுபோக்கின்பங்கள், ஓய்வுக்கால எழுச்சிகள் எனக்கொண்டு, வாழ்க்கைமேம்பாட்டுக்கு உழைக்கும் ஆடவர், பெண்டிரே உலக நாகரிக வளர்ச்சியில் பங்கு கொள்பவர் என்று ஷா கருதினார். இன்றைய உலகில் பெண்பாலார் தம் அறிவுத் திறம் முழுவதையும் அக அழகைப் பேணுவதில் செலவுசெய்யா மல், புற அழகைப் பேணுவதில் செலவுசெய்கின்றனர்.ஆடவரைப் பெருஞ்செயல் செய்யத்தூண்டி, அவர்களுடன் ஒத்துழைப்பதற்கு மாறாக, அவர்கள் ஆடவர் தற்சார்பை அடக்க முனைகின்றனர். இவற்றைக் கண்டு ஷா காதலையும், அதையே தன் முழுப் பண் பாகக் கொண்ட போலிப்பெண்மையையும் ஒருங்கே கண்டித் தார். ஆனால், இதனால் அவர் காதல் வாழ்வையே வெறுப்பவர் என்று பலர் எண்ணிவிடக்கூடும்; எண்ணுகின்றனர். இது தவறு. அவர் ஒரு மாதை மணந்து வாழ்ந்தார் என்பதை இத்தகையோர் எண்ணிப் பார்க்கவேண்டும். எனினும், அவர் மற்றக் கணவரைப் போல், மனைவியைத்தம் வாழ்க்கை வாய்ப்புக்களுக்கு ஒரு துணைப்பொருள் என்று கொள்ளாமல், அவரிடம் தம்