பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாம் பிரௌணின் பள்ளி வாழ்க்கை

299

சித்தம் செய்தான். வில்லியம்ஸே முதலில் களத்திலிறங்கி விரைவில் சண்டைக்கு வரும்படிடாமை அழைத்தான்.

சண்டைக்கு இறங்குகையில் டாமிடம் ஈஸ்ட், “நண்பனே, கைத்திறத்தையே காட்ட வேண்டும் என்று இராதே. தலையையும் காலையும் பயன்படுத்துவதே சிறந்தது,” என்றான்.

டாம் ஈஸ்ட் அறிவுறுத்திய எளிய முறையைப் பின்பற்றவில்லை. தன் கைகளாலேயே முழு வலிமையும் காட்டிப் போர் தொடங்கினான். இந்தப் பிடியுடன் எதிரி மடங்கிவிடுவான் என்ற முறையிலேயே இருவரும் ஒருவரை ஒருவர் பற்ற முனைந்தார்கள். இந்த அடியில் எதிரி விழுந்து விடுவான் என்ற முறையிலேயே இருவரும் அடிபயின்றனர். பக்கத்தில் நின்றவர்களில் மற்போர் முறை தெரிந்தவர்கள், “இம்முறையில் நெடுநேரம் போர் செல்லாது, களைத்துவிடுவார்கள். வெற்றி முற்றிலும் உடல்வலுவின் பக்கமே ஏற்பட்டுவிடும்," என்றார்கள். அவர்கள் கூறியபடியே சிறிது நேரம் மூர்க்கத்தாக்குதல் செய்து இருவருமே தளர்ந்தனர்.

இருவரும் எளிதில்

முதல் அரங்க முடிவில் இருவரும் சரிசம நிலையில் இருந்தனர். “அமைதி, அமைதி. டாம். முன்னேறித் தாக்காதே. தாக்கவிடு" என்று மெல்ல அறிவுறுத்தினான் ஈஸ்ட், டாமின் வியர்வை சொட்டும் முகத்தைத் துடைத்துக்கொண்டே.

ஆனால் இரண்டாம் தடவையிலும் டாமே முதலிலிருந்து தாக்குதலில் இறங்கினான். வில்லியம்ஸும் தாக்கினான். அவன் தாக்குதல்கள் பெரும்பாலும் இடது கைத் தாக்குதல்களாக

ருந்தன. திடீரென்று அவன் வலது கையால் ஓங்கி ஒரு குத்துவிட்டான். டாம் புல் நிலத்தின் மீது சென்று விழுந்து புரண்டான். வில்லியம்ஸின் ஆதரவாளர் மகிழ்ச்சியாரவாரம் செய்தனர். டாம் ஆதரவாளரான பள்ளி இல்லத்தார்

முகம்கோணிற்று.

ஆயினும் ஈஸ்ட் சளைக்காது இத்தடவையும் பஞ்சினால் முகத்தை ஒற்றி வீசிறினான். வேறு இரண்டு பள்ளி இல்லச் சிறுவர் அவன் கைகளைப் பிடித்துவிட்டனர்.

"டாம், உனக்கு இது விளையாட்டாயிருக்கலாம். உன் நண்பர்களுக்கு இது உயிர் நோவாயிருக்கிறது. தாக்குதலாலேயே