டாம் பிரௌணின் பள்ளி வாழ்க்கை
301
வில்லியம்ஸின் ஆட்கள் சூழ்ச்சி முறைகள் கையாளும்படி அவனைத் தூண்டினர். வில்லியம்ஸ் செருக்ககன்றது. அவனும் எப்படியாவது வெல்ல எண்ணி அமைதியாகப் போராடினான். இருபுறமும் மீண்டும் சமநிலையில் நின்றன. இருசாராரும் ஆரவாரமில்லாமல் வெற்றி பற்றிக் கவலையுடன் நின்றனர்.
டாமின் முகத்தில் ஒருபுறம் வீங்கிவிட்டது. உதடுகள் கன்னி குருதி கொப்புளித்துள்ளன. நெற்றியில் ஒரு புடைப்பு.ஆயினும் ஈஸ்ட் அவற்றால் நோவு எழாமல் முறைப்படி பஞ்சிட்டு வேதுகொடுத்து அனுப்புகிறான். முகம் தவிர உடலில் நோவு ஏதுமில்லாததால் அவன் தாக்குதலை அது தளர்த்தவில்லை. ஈஸ்டின் அறிவுரைப்படிடாம் முகத்தில் தாக்காததால், வில்லியம்ஸ் முகம் காயமில்லாதிருந்தது. ஆகவே வெளிப்பார்வைக்கு அவன் வலுவுடையவனாகவே காணப்பட்டான். ஆனால் அவன் உடல் காயமில்லா ஊமைக் குத்துக்களால் உள்ளூர ஆடிற்று. விலாப்புறம் இருந்த நோவு அவனை முன்னேற அஞ்சும்படி செய்தது.
வில்லியம்ஸின்
பிடியில் பட்டுக் கிலிகொண்டு மனங்கலங்கியிருந்த ஆர்தருககு, தன்னை வந்து காத்த டாமிடம் ஏற்பட்ட நன்றி கரைகடந்தது. இதுவரை, அவனை ஆர்தர் தான் பாதுகாவலனாக மதித்திருந்தான்; நேசித்திருந்தான். தோழமை உணர்ச்சி கொண்டிந்தான். தனக்காக ஓர் ஆணவம் பிடித்த உயிர்ப் பகைவன் கையில் சென்று று அவன் தன்னை இடருக்குள்ளாக்கக் கூடும் என்று அவன் கருதவில்லை. தாய்க்கடுத்தப்படி தனக்காக இவ்வளவு செய்பவர் டாமைத் தவிர வேறு யாரும் இருக்கமாட்டார்கள் என்று அவன் கண்டான்.
சண்டை தொடங்கியதே அவன் உணர்ச்சியில் மீண்டும் மாற்றம் ஏற்பட்டது. அவன் நன்றி அச்சமாயிற்று. ஆயினும் அவன் அச்சம் இப்போது தனக்கானதன்று.தன்னுயிரைவிட அவன் டாமின் உயிருக்கு மிகுதியாக அஞ்சினான். தன்னுயிர் போனால்கூடத் தன் தாய் ஒருத்திக்குத் தான் கேடு. ஆனால் டாமின் உயிர் ரக்பியின் உயிர். ஆகவேதான் “ரக்பியின் வீரமணி- எளியவர் துணைவன்- எல்லாருக்கும் இனியவன் அண்ணன் டாம் உயிருக்கு என்ன இடர் நேருமோ?" என்று அவன் துடித்தான்.
-
என்