302
||– –
அப்பாத்துரையம் – 8
வில்லியம்ஸ் போன்ற மதயானையை டாம் வெல்லக் கூடும் என்ற எண்ணமே அவனுக்கு எழவில்லை. டாம் விழுவது உறுதி என்றே நம்பினான். இதனால்தான் அச்சம் அவனைப் பற்றியது. சண்டை நீளுந்தோறும் அச்சம் மன உடைவாயிற்று."இனி என்ன செய்வது! இல்லத் தலைவரிடம் சென்று சொல்லலாமா? சொன்னால் தலைவர் ஆர்னால்டு தடுத்து டாமை வ்விடரிலிருந்து விடுவிக்க மாட்டாரா?” என்று அவன் மனப்பதைப்புக் கூறிற்று.
அவன் ன்னும் அச்சத்தால் தொலைவில் தான் நின்றிருந்தான். டாம் சண்டையிடுவதைப் பார்க்க அவன் அடி வாங்குவதைக் காண அவனால் பொறுக்க முடியவில்லை. இதனிடையேதான் “வாழ்க டாம்! வெல்க பள்ளி இல்லம்!” என்ற இல்லத்தாரின் ஆரவாரம் கேட்டது. அவனுக்குச் சிறிதே நம்பிக்கை வந்தது. அவன் சண்டையின் பக்கம் முகம் திரும்பினான்.
ஆனால், அடுத்த தடவை மனைவீரர் ஆரவாரம் கேட்ட போது மீண்டும் அவன் மனங்கலங்கினான். மீண்டும் துடிதுடித்தான். அவனால் சும்மா இருக்க முடியவில்லை. முன் பள்ளியின் ஆட்டத் தலைவனாயிருந்த புரூக்கிடம் சென்று முறையிட்டு அழுதான். தன் டாமைக் காக்க விரைந்து வரும்படி மன்றாடினான்.
புரூக் பள்ளிக் கட்டுப்பாட்டையும் மதித்தவர். அதே சமயம் நேர்மையையும் மதித்தவர். சண்டை நேர்மையாக நடப்பதுவரை தலையிடாமலிருப்பதே நலம் என்று நினைத்தவர். ஆகவே ஆர்தரிடம் ஆதரவான சொற்கள் கூறி, “டாமுக்கு இடர் நேராமல் நான் பார்த்துக் கொள்கிறேன்; நீ கலங்காதே. ஆனால் டாம் கோழையல்லன்; சண்டை தெரியாதவனுமல்லன். நானும் கூடவந்து இருந்து நேர்மை காக்கிறேன்.டாமுக்குக் கேடுவந்தால் தலையிடுகிறேன்," என்றார்.
கூறியபடியே அவர் ஆர்தருடன் வந்துநின்று ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
ஆட்டத்தைக் கவனித்த மற்றொருவர் பள்ளியின் ஏவலாளர் துறையின் துணைத் தலைவர். அவர் பிள்ளைகளை