டாம் பிரௌணின் பள்ளி வாழ்க்கை
(303
நோக்கி, “டாமும் வில்லியம்ஸும் மற்போர் இடுக்கின்றனர் என்ற செய்தி தலைவர் ஆர்னால்டிடம் சென்றுவிட்டது. அவர் வருமுன் கலைந்துவிடுங்கள்,” என்றார்.
அதை
ஆனால் பிள்ளைகள் மற்போரை நிறுத்த விரும்பவில்லை. தலைவர் வருமுன் முடித்துவிட விரைந்தனர். இருபுறத்தவரும் விரைவில் தாக்கி வெல்லும்படி தத்தம் வீரரை ஊக்கினர்.
இனிச் சண்டை விளையாட்டுச் சண்டையன்று; உயிர்ப் போராட்டமாகவே இருக்கும் என்பதை அரங்க வீரர் இருவரும் உணர்ந்து கொண்டனர். ஆயினும் இருவரும் விழிப்பாகவே போரிடுகின்றனர். ஒரு சமயம் ஒருவர் உறுக்குகின்றனர். ஒரு சமயம் ஒருவர் குத்து அவருக்கு வெற்றி தந்த விடும் போலிருக்கிறது.டாம் விரைந்து சுழன்று தாக்குகிறான். எதிரி இரண்டு தடவை தள்ளாடி விழுந்தான். ஆனால், தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் மீட்டும் எழுந்து தாக்கினான். இருவரும் ஒரே இறுதித் தாக்குதலில் வலக்கைக் குத்தால் சண்டை முடிக்க நேரம்பார்க்கின்றனர். இதனால் போர் பார்வைக்கு அமைந்த நடனம் போன்றதாகிறது.
கதிரவன் மேல்திசையில் சாய்கிறான். வானத்தின் பொன்மையும் சிவப்பும் நீலமும் மாறி மாறி ஆடரங்கின் வீரர் முகத்திலும், சூழநின்று காண்பவர் முகத்திலும் பிடரியிலும் விழுகின்றன. கதிரவன் ஒரு முகிலின் பின் மறைகிறான். அச்சமயம் வில்லியம்ஸின் உடல் முன்னோக்கிப் பாய்ந்தது. கைகள் ஓங்கி டாமின் முகத்தில் குத்தின. ஆனால் வேகமாக டாம் விலகுகிறான். தள்ளாடும் எதிரியைச் சுற்றி விருவிருவென்று சுழல்கிறான். ஞாயிறு முகிலினின்றும் வெளிவருகிறது. அவன் பொன்கதிரொளி வில்லியம்ஸின் மீது படுகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் நெருங்குகின்றனர். அடுத்த கணம் டாமின் ஒரு குத்தில் வில்லியம்ஸ் மூன்றாவது தடவையாக முடிவாகப் பல அடி தொலை சென்று விழுகிறான்.
வில்லியம்ஸ் மெல்ல எழுந்திருக்கிறான். ஆனால், தாக்க முன்வரவில்லை. வலி பொறுக்கமாட்டாமல் தோல்வியை ஒப்புக் கொள்கிறான். இல்ல மாணவர் ஆராவரம் செய்கின்றனர். "வெற்றி டாமுக்கே, வாழ்க டாம்பிரௌண்; வாழ்க ரக்பி இல்லம்,” என்று ஓசை எழுகின்றது.