306
அப்பாத்துரையம் – 8
“என் தவறு கண்டு கண்டிப்பீர்களோ என்று அஞ்சினேன். உங்கள் நட்பு கண்டிக்காது விட்டதன்றிப் புகழ்கின்றது.”
“அன்று; புகழ்வது நட்பு அன்று. தலைவர் தரும் கட்டளை வேறு. அறிவும் அன்பும் தரும் கட்டளை வேறு. குடியாட்சியின் இவ்விரு தத்துவங்களையும் என் செயலார்வத்தில் நான் அடிக்கடி மறந்துவிடுகிறேன் நீங்கள் நினைவூட்டினீர்கள். அதற்குப் புகழாமலிருக்க முடியுமா?”
ஆனால், அறிஞர் புகழ்ச்சி நட்பின் புகழ்ச்சியன்று என்பது அடுத்து அறிவுரையிலேயே விளங்கிற்று.
"ஆயினும் நீங்கள் கவனிக்காத தத்துவம் ஒன்று இதில் இருக்கிறது.நீங்கள் கூறியதிலிருந்தே சண்டை உங்கள் பக்கமாகச் சாய்ந்தால் நிறுத்தாமலிருப்பீர்கள். எதிராகச் சாய்ந்தால், நிறுத்துவீர்கள் என்ற எண்ணம் ஏற்பட வழியிருக்கிறது. அதற்கிடமில்லாமலிருக்க வேண்டுமானால், இந்த மயிரிழை நியாயம் பார்க்காது, அதனை அறவே ஒழிக்கவேண்டும்” என்றார் அவர்.
அறிஞர் கேள்விகளுக்குச் சரியான விளக்கவிடை அளித்து விட்டதாக எண்ணிய புரூக் மீண்டும் வெட்கினார். அதற்குள் அறிஞர் இல்லத்தின் வாயில் வந்துவிட்டது. அன்றைய பேச்சை அத்துடன் முடித்துத் தப்பிவிட எண்ணிய புரூக் விரைவில் விடைபெற்றுச் சென்றார்.
டாம் வெற்றி பெற்றாலும் காயம் ஆற இரண்டொரு நாள் ஆயிற்று. அதுவரை அவன் பார்வை மங்கியிருந்தது. முகம் வீங்கியிருந்தது. காதுகளில் ஒரே இரைச்சலாயிருந்தது. அவன் பெருவிரல் சுளுக்கி வீக்கமுற்றிருந்தது.பெருவிரலைப் பனிக்கட் கொண்டு கட்டிவிட்டு, உடல் தெம்பு வரும்வரை தேநீரே ணவாக உட்கொண்டான்.
டி
ஆர்தர் டாமின் பக்கமே இருந்தான். தன்னால் டாமுக்கு நேர்ந்த இடரை எண்ணி எண்ணி அவன் வருந்தினான்.எல்லாரும் டாமின் போர்த்திறத்தைப் போற்றுவதில்கூட அவன் கலங்க வில்லை. டாமையே பார்த்துக் கண்கலங்கி நின்றான். டாம் எவ்வளவு ஆறுதல் கூறியும் அவன் மனமமையவில்லை.கடைசியில் டாம் அவன் நிலை கண்டு சிரித்தான். "ஏன் சிரிக்கிறாய்?” என்று