பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308

அப்பாத்துரையம் – 8

ஆனால் தெய்வம் ஆர்தர் பக்கமே இருந்தது. இருவரும் பேசும் போதே கதவு தட்டப்பட்டது. புரூக் அவர்கள் இருவரையும் அழைத்திருந்தார். இருவருக்கும் புரூக் தேநீர் சிற்றுண்டி அளித்தார். திரும்பிவரும் சமயம் அவர் டாமிடம், "இந்தச் சண்டை இத்துடன் நிற்கவேண்டும். வில்லியம்ஸிடம் இதே கட்டளை அனுப்பிவிட்டேன். நாளை நீங்கள் இருவரும் நண்பர்களாகப் பள்ளி மாணவர் அனைவர் முன்னிலையிலும் கைகுலுக்கிக் கொள்ள வேண்டும். நானும் அதற்குச் சான்றாயிருப்பேன்," என்றார்.

டாம் தலையசைத்தான்.

ஆர்தர் விருப்பம் நிறைவேறிற்று. அவன் மகிழ்ந்தான்.